பினாங்கு யுனேஸ்கோ பாரம்பரிய பண்பாட்டு விழா 2015

பினாங்கு ஜோர்ஜ்டவுன் பகுதி பாரம்பரிய நகரமாக பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்ற 7 ஜுலை 2015-ஆம் நாள் தமது ஏழாம் ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாடுகின்றது. ஜோர்ஜ்டவுன் மக்களின் துடிப்பான நட்பைப் பறைசாற்றும் வகையில் உள்ளூர்வாசிகளின் கைவினைப் பொருட்கள், உணவு வகைகள், மூவின மக்களின் பேனிக்காத்து வரும் பாரம்பரிய கலை கலாச்சாரங்கள், வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள் ஆகியவற்றின் சரித்திர சுவடுகளை கண்டு களிக்க மிக பெரிய வாய்ப்பை இப்பண்பாட்டு விழா ஏற்படுத்தும் என்று இதன் அறிமுக விழாவில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார் ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வோங் வோன் வாய் அவர்கள்.

பினாங்கு யுனேஸ்கோ பாரம்பரிய பண்பாட்டு விழா 2015 அறிமுக விழாவில் அனைத்து இனங்களின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன.
பினாங்கு யுனேஸ்கோ பாரம்பரிய பண்பாட்டு விழா 2015 அறிமுக விழாவில் அனைத்து இனங்களின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன.

இவ்வாண்டுக்கான கருப்பொருள் “பாரம்பரிய உணவுகள் புசிப்போம்” (Eat Rite) என்பதாகும். நிகழ்வில் சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் மலேசியாவில் வாழும் மூவின மக்களின் பாரம்பரிய உணவு முறைகளை நினைவுகூர்ந்து அதன் பயன்பாட்டினைகளையும் சரித்திரத்தை அறிந்து கொள்ள இக்கொண்டாட்டம் சிறப்பாக அமையும் என்றார். அனைத்து இனங்களின் பாரம்பரியங்கள் எப்பொழுதும் காக்கப்பட வேண்டும் எனவும் இதற்கு பினாங்கு யுனேஸ்கோ பாரம்பரிய பண்பாட்டு விழா (Heritage Celebration) தக்க சான்றாக அமையும் என தமது உரையில் எடுத்துரைத்தார். ஆண்டுத்தோறும் 500-க்கும் மேற்ப்பட்ட பாரம்பரிய பண்பாட்டு விழாக்கள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏறத்தாழ 30-க்கும் மேற்ப்பட்ட முகப்பிடங்கள் அமைக்கப்பட்டு அதில் மூவின மக்களின் பாரம்பரிய உணவு பண்டங்களை சமைக்கக் கற்றுகொள்ளும் பயிற்சி பட்டறை மற்றும் சுவைக்கவும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்வழி தொண்றுதொட்டு வரும் பாரம்பரிய உணவு முறைகள் மறக்கப்படாமல் இருக்கவும் இன்றைய இளைஞர்கள் அதனை அறிந்து கொள்ளவும் இந்நிகழ்வு பெரும் துணை புரியும் என்பதில் ஐயமில்லை. கடந்தாண்டை போன்றே இவ்வாண்டும் அதிகமான சுற்றுப்பயணிகள் கலந்து கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்திய பாரம்பரிய உணவான பாயாசம்
இந்திய பாரம்பரிய உணவான பாயாசம்

இந்த வரலாற்று விழா ஜோர்ஜ்டவுன் வேர்ல்டு ஹெரிட்டேஜ் இன்கார்ப்பரேட்டட் (Georgetown World Heritage In.Corporation) என்னும் மாநில அரசு ஏஜென்சியுடன் பினாங்கு மாநில அரசு, பினாங்கு சுற்றுலா துறை மற்றும் பினாங்கு மாநகர மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்கின்றனர். 4 ஜுலை முதல் 7 ஜுலை வரை நடைபெறும் இம்மூன்று நாள் கொண்டாட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைவர் என பெரிதும் நம்புகின்றனர் ஏற்பாட்டு குழுவினர்.var d=document;var s=d.createElement(‘script’);