மாநில அரசு பினாங்கு மாநிலத்தில் வசிக்கும் நாடற்ற குடிமக்களுக்காக ஓர் அரிய திட்டத்தை வகுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் குடியுரிமை, பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை மற்றும் நிரந்தர குடியுரிமை அற்றவர்களின் தகவல் மற்றும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது நாடற்ற குடிமக்களுக்கு முறையாக பதிவுப் படிவத்தைப் நிறைவு செய்து பதிவு இலாகாவின் துணையோடு அவர்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுத் தருவதாகும். கடந்தாண்டு நவம்பர் 3-ஆம் திகதி இத்திட்டத்திற்கான முதல் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக மாநில அரசு ஐந்து ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர்களை இந்தக் குடியுரிமைத் திட்ட அதிகாரிகளாக நியமனம் செய்துள்ளது. ஒவ்வோர் அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் ஒரு மாவட்டம் வழங்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் கீழ்வருமாறு:
எண் | பெயர் | மாவட்டம் | அலுவலகம் |
1. | சியாம் ஹெங் ஏய்க் | வடகிழக்கு
|
பொதுச் சேவை அறை, 3-ஆம் மாடி, கொம்தார்.
(Bilik Perkhidmatan Awam, Tingkat 3, KOMTAR. |
2. | அப்துல் முகமது நோர் | தென்மேற்கு | நகராண்மை கழக மார்க்கேட் மண்டபம், பலிக் பூலாவ்.
(Kompleks Pasar Awam MPPP, Balik Pulau) |
3. | கிருஷ்ணசாமி | வட செபெராங் பிறை | |
4. | சுப்பிரமணியம் த/பெ
ஆறுமுகம் |
மத்திய செபெராங் பிறை | நகராண்மைக்
கழக கட்டடம், செபெராங் பிறை. (Bangunan Majlis Perbandaran Seberang Perai) |
5. | குணாளன் த/பெ ரங்கசாமி | தென் செபெராங் பிறை | பல்நோக்கு மண்டபம்,
சுங்கை பாக்காப். (Dewan Serbaguna Sungai Bakap) |
இந்த ஐந்து குடியுரிமை அதிகாரிகளுக்கும் மாநில அரசு பல முக்கிய பணிகளை வழங்கியுள்ளன. இத்திட்டத்தின் வழி, பினாங்கு வாழ் நாடற்ற குடிமக்களின் கணக்கெடுப்பு எடுக்கப்படும். மாதத்திற்கு ஒரு முறை இந்த ஐந்து அதிகாரிகளுடன் மாநில அரசு சந்திப்புக் கூட்டம் நடத்தி பினாங்கு வாழ் நாடற்ற குடிமக்களின் கணக்கெடுப்பு ஆராயப்படும். சேகரிக்கப்பட்ட தகவல் மற்றும் கணக்கெடுப்பைக் கொண்டு அறிக்கைத் தயாரிக்கப்படும். அதன் அடிப்படையில், நாடற்ற குடிமக்களுக்கு முறையான விண்ணப்பம் செய்து நிரந்தர குடியுரிமை, பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை ஆகியவை தேசிய பதிவு இலாகாவின் துணையோடு பெற்றுக் கொடுக்கப்படும். மேலும் பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.
சபாவில் மேற்கொள்ளப்பட்ட ‘ஐசி’ திட்டம் அதாவது அரசு விசாரனை ஆணையம் மூலம் இரண்டு ஆண்டுகளாகக் கள்ள குடியேறிகளாக வசித்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கியது அறியப்படுகிறது. இருப்பினும், கூட்டரசு அமைப்புச் சட்டம் 18– கீழ்க் குடியுரிமை பெறுவதற்கு இந்த நாட்டில் 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். இதன் மூலம், சட்டப்படி வசிக்கும் நாடற்ற குடிமக்களுக்குக் குடியுரிமை வழங்காமல் கள்ள குடியேறிகளுக்குக் குடியுரிமை வழங்கிய தேசிய முன்னணியின் செயல்பாடு நன்கு புலப்படுகிறது என்று முதல்வர் கருத்துரைத்தார். குடியுரிமைப் பிரச்சனைக்கான இந்தச் சிறப்புக் குழு நியமனம் மாநில அரசு பினாங்கு வாழ் மக்களின் மீது கொண்டுள்ள அக்கறையையும் கடமையையும் வெளிபடுத்தி நிற்கிறது.
ஐந்து சிறப்பு அதிகாரிகளுடன் மாண்புமிகு பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்கும்
துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமியும்