2016-ஆம் ஆண்டுக்கானப் பள்ளி தொடக்கத்தை முன்னிட்டு பினாங்கு ஷான் குழந்தை காப்பகம் சார்ந்த 8 மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடை மற்றும் உபகரணப் பொருட்கள் வாங்வதற்குப் பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது. அரசு சாரா இயக்கங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் இக்காப்பகத்திற்கு உதவிக்கரம் நீட்ட முன் வர வேண்டும் என்றார் அதன் தலைமை நிர்வாகி திரு கிருஷ்ணன்.
இவ்வருடம் வென்லக் அனைத்துலக கல்வி மையம்(Venlaak International Academia) ஏற்பாட்டில் 8 மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடை மற்றும் உபகரணப் பொருட்கள் வாங்வதற்குப் பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கொடி மலை நாடாளுமன்ற உறுப்பினர் சாய்ரில் கீர் ஜொஹரி மற்றும் வென்லக் கல்வி மைய ஆலோசகர் டாக்டர் திரு பிரபாகரன் கலந்து சிறப்பித்தனர்.
சன்மானம் பெற்றுக்கொண்ட மாணவர்கள் உற்சாகத்துடன் 2016-ஆம் ஆண்டுக்கான கல்வியைத் தொடருவதோடு தேர்வில் சிறந்த தேர்ச்சி அடைய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் நாடாளுமன்ற உறுப்பினர். அல்லும் பகலும் அயராது கல்வி கற்று வாழ்வில் உயர்ந்த நிலை அடைந்த தலைவர்களை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
பொது மக்கள் பினாங்கு ஷான் குழந்தை காப்பகத்திற்குப் பொருளுதவியாகக் குறிப்பாக உணவுப் பொருட்கள் வழங்குமாறு அதன் நிர்வாக இயக்குநர் கேட்டுக்கொண்டார். மேலும் பினாங்கு மாநகர் நகராண்மைக் கழக உறுப்பினர்களான சேர்லீனா அப்துல் ரஷிட் மற்றும் கிரிஸ் லீ சுன் மற்றும் மாவுன் எக்ஸ்ரின் சமூக முன்னேற்ற மற்றும் பாதுகாப்பு கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.} else {