செபராங் ஜெயா – பினாங்கு ‘ஸ்மார்ட்’ வாகனம் நிறுத்தும் (பி.எஸ்.பி) திட்டத்தின் செயலி பயன்பாட்டின் மூலம் இரண்டு ஊராட்சி மன்றங்களும் (எம்.பி.பி.பி மற்றும் எம்.பி.எஸ்.பி) வெற்றிகரமாக ரிம 4.28 மில்லியன் சேகரித்தன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18- ஆம் தேதி தொடங்கிய இந்த செயலியின் மூலம் 2 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை இடம்பெற்றுள்ளதாக எம்.பி.எஸ்.பி வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உள்ளுராட்சி, வீடமைப்பு, நகர்ப்புற & கிராமப்புற மேம்பாட்டு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ குறிப்பிட்டார்.
“ஜூலை,2 வரை, பி.எஸ்.பி பயன்பாட்டின் மொத்த பதிவிறக்கங்களின் எண்ணிக்கை (பயனர்கள்) 317,933 ஆகும், இதில் ‘Android’ பயனர்கள் 213,805 பதிவிறக்கங்களும், ‘iOS’ பயனர்கள் 104,128 பதிவிறக்கங்களும் செய்துள்ளனர்.
“மேலும், இது ஒரு பெரிய எண்ணிக்கையாகும், பினாங்கு மாநில அரசு அறிமுகம் செய்த இந்த முயற்சியை பொது மக்கள் முழுமையாகப் பயன்படுத்துவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்”, என ஜெக்டிப் அகம் மகிழ தெரிவித்தார்.
நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (பி
கே.பி) மற்றும் கோவிட் -19 தொற்றுநோய் தாக்கத்தை தொடர்ந்து ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படவிருந்த பி.எஸ்.பி திட்டத்தை நிறைவு செய்வதற்கான கால அட்டவணை பிப்ரவரி 2021 இறுதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஜெக்டிப் தெரித்தார்.
எச்.டி.டி நிறுவனம் தற்போது கணினி பகுப்பாய்வு, சென்சார் ஆய்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாட்டு பலகைகள் மற்றும் குறிப்பிடுதல் ஆகிய பணிகளுடன் 15,000 செண்சர்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அத்திட்டங்கள் வருகின்ற ஜூலை முதல் படிப்படியாக பொருத்தப்படும்.
‘ஸ்மார்ட்’ வாகனம் நிறுத்தும் திட்டத்தின் முதல் கட்டமாக,அதாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) அமல்படுத்துவதற்கு முன்பு, சீனா நாட்டின் வுஹான் நகரத்தில் இருந்து மொத்தம் 1,031 சென்சார்கள் பெறப்பட்டன, அவற்றில் 667 யூனிட் சென்சார்கள் எம்.பி.பி.பி பகுதியில் நிறுவப்பட்டுள்ளன, மேலும் 364 யூனிட்டுகள் எம்.பி.எஸ்.பி பகுதியில் நிறுவப்பட்டுள்ளன என கூறினார்.
“கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, எச்.டி.பி நிறுவனம் மால்டா குடியரசில் இருந்து கட்டங்கட்டமாக 38,000 சென்சர்கள் வருகின்ற ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் பொருத்தப்படும். இந்த எண்ணிக்கையில் எதேனும் சேதங்கள் ஏற்பட்டால் புதிய சென்சர் பொருத்தும் வகையில் கூடுதலாக 2,000 சென்சர்களும் அடங்கும்.
எச்.டி.சி நிறுவனம்
பயனீட்டாளர்களின் தேவையைப் பூர்த்திச் செய்ய குறிப்பாக தொழில்நுட்ப பயன்பாட்டில் குறைந்த திறமை கொண்டவர்களுக்கென பிரத்தியேகமாக
மின்-கூப்பன் விற்பனையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை
மாநிலம் முழுவதும் இந்த மின்-கூப்பன் விற்க மொத்தம் 242 துணை முகவர்கள், 205 எம்.பி.பி.பி துணை முகவர்கள் மற்றும் 37 எம்.பி.எஸ்.பி துணை முகவர்கள், பதிவுச் செய்துள்ளனர்.
இதனிடையே, 30 ‘ஹேப்பிமார்ட்’ விற்பனை மையங்களிலும் ஜார்ஜ்டவுன், ப்ரிமா தஞ்சோங், தஞ்சோங் தோகோங், ராஜா உடா மற்றும் ஓங் யி ஹவ் சாலை மற்றும் லெபு மெகலம், நாகூர் மற்றும் பேராக் சாலையில் அமைந்துள்ள ஐந்து ’24 எக்ஸ்பிரஸ்’ கிளைகளிலும் மின்-கூப்பன்களை விற்பனை செய்யத் தொடங்கப்பட்டுள்ளன என டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் சிங் டியோ விவரித்தார்.
‘ஸ்மாட்’ வாகனம் நிறுத்தும் திட்டம் பினாங்கு மாநில அரசு பினாங்கு2030 இலக்கை அடைய மற்றுமொரு முயற்சியாகத் திகழ்கிறது.