பினாங்கு CAT டயாலிசிஸ் மையம் குறைந்த வருமானம் கொண்ட சிறுநீரக நோயாளிகளுக்கு மலிவு மற்றும் சிறந்த சேவையை வழங்குகிறது

Admin
dev 1545

பாலேக் புலாவ் – பினாங்கு, பாலிக் புலாவில் அமைந்துள்ள பினாங்கு கேட் (CAT) டயாலிசிஸ் மையம் நூற்றுக்கணக்கான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டயாலிசிஸ் மற்றும் இதர சேவைகளை வழங்கி வருகின்றது.

இந்த சேவை மையம் 10 ஆண்டுகளுக்கு முன்பு பினாங்கு மாநில அரசாங்கத்தின் முன்முயற்சியின் கீழ் நிறுவப்பட்டது. இச்சிகிச்சைக்காக மானியம் கிடைக்கப்பெறாத நோயாளிகள் மாநில அரசு மற்றும் அமைச்சின் கூட்டு மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு முறையும் சிகிச்சைக்காக வருகையளிக்கும் நோயாளிகள் தலா ரிம10 சிறப்பு விலையைச் செலுத்துவார்.

பினாங்கு CAT டயாலிசிஸ் மையம் மூத்த செவிலியர் மேலாளர் லிம் சூன் உய்யின் கூற்றுப்படி, இந்த மையம் நிறுவப்பட்டதிலிருந்து, ஆரம்ப காலக்கட்டத்தில் இரண்டு நோயாளிகளிடமிருந்து இப்போது 76 நோயாளிகளுக்குச் சேவை வழங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. அவர்களில் 30% க்கும் அதிகமானோர் மாநில அரசாங்கத்திடமிருந்து கூட்டு மானியங்களைப் பெற்றுள்ளனர்.
சுகாதார அமைச்சு சிறுநீரக டயாலிசிஸ் இயந்திரங்களை 6ல் இருந்து 14 யூனிட்களாக அதிகரித்துள்ளது.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பொதுவாக சமூகப் பாதுகாப்பு மற்றும் ஜகாத் போன்ற நிறுவனங்களில் இருந்து மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இருப்பினும், சுகாதார அமைச்சு, நோயாளியின் சுமையைக் குறைக்க மத்திய அரசுடன் ஒத்துழைக்கிறது.

“சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பொதுவாக வாரத்திற்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும். இந்த சிகிச்சை காலம் குறைந்தது நான்கு மணி நேரம் எடுக்கும்.

இந்த மையத்தின் மூலம் குறைந்த விலையில் சேவையைப் வழங்கி, அதிக மக்கள் பயன்றுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், 30% நோயாளிகள் மாநில அரசு மற்றும் சுகாதாரத் துறை நிதி வழங்கும் மானியம் வாயிலாக பயனடைகின்றனர்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இம்மையம் மூடப்பட்டிருக்கும். அதை தவிர, இந்த மையம் ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் என்றும், சிறுநீரக நோயாளிகளைக் கவனிப்பதற்காக விடுமுறை நாட்களிலும் வழக்கம் போல் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுநீரக டயாலிசிஸுக்காக ஒரு நோயாளி ஒரு தனியார் மருத்துவமனை அல்லது கிளினிக்குச் சென்றால், ஒரு அமர்விற்கானச் செலவு ரிம150 முதல் ரிம300 வரை ஆகும். இதில் ரீஃபில்லிங் ஊசி மற்றும் பிற மருத்துவச் சேவைகள் சேர்க்கப்படவில்லை. மாநிலத்தில் சிறுநீரக டயாலிசிஸ் சேவைகளைக் கொண்ட அரசு சாரா நிறுவனங்கள், இடவசதி அல்லது இயந்திர வரம்புகள் காரணமாக வரம்பற்ற நோயாளிகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதன்காரணமாக, இந்த மையம் உருவாகப்பட்டு, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சமூகக் காப்பீடு இல்லாத, ஏழைக் குடும்பங்களுக்குச் சேவை வழங்குகிறது.

முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில், உணவுப் பழக்கவழக்கங்கள் மட்டுமின்றி, மற்ற நோய்களும் சிறுநீரக நோய்க்குக் காரணம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளில் பாதிக்கும் நோயாளிகளுக்கு சிறுநீரக நோய் ஏற்படுகிறது.

dev 1516

“இன்றுவரை, நம் நாட்டில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், பினாங்கில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 5% அதிகரிக்கிறது, மேலும் பினாங்கில் நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது நாட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது”.

குணப்படுத்துவதை விட அது வராமல் தடுப்பது சிறந்தது. இரத்தப் பரிசோதனை உட்பட, முன்கூட்டியே இந்நோயைக் கண்டறியப்பட்டால், நீங்கள் சிறந்த சிகிச்சையைப் பெறலாம்.

சிறுநீரக நோய் பாதிப்பு மீள முடியாதது, ஆனால் முன்கூட்டியே கண்டறியப்பட்டால், முன்கூட்டியே டயாலிசிஸ் நிலைக்கு வராமல் இருக்க மற்ற சிகிச்சைகளை நாம் பின்பற்றலாம்.

சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பில், பொதுவாகவே நோயாளிகள் மருத்துவர்களின் ஆலோசனைகளை மதித்து, அவர்களின் வாழ்க்கைப் பழக்கத்தை மாற்றினால், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒழுக்கமான வாழ்க்கையைப் பராமரிக்க முடியும், மேலும் அவர்களின் ஆயுட்காலமுன் தொடர்ந்து நீட்டிக்கப்படலாம்.

dev 1563

மேலும், இந்த மையத்தில் தற்போது 11 பணியாளர்கள் உள்ளதாகவும், தாதியர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

தாதியர் தொழிலில் ஆர்வமுள்ளவர்கள் இம்மையத்தில் பணிப்புரிய விண்ணப்பிக்கலாம்.