பினாங்கு2030 73 சதவிகிதம் சாதனை பதிவு – முதலமைச்சர்

Admin
img 20240921 wa0021

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் பினாங்கு2030 என அழைக்கப்படும் 2030 ஆம் ஆண்டு வரை மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், ஆறு (6) ஆண்டுகளில் 373   திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த இலக்கில் 73 சதவீதத்தை எட்டியுள்ளதாக  தெரிவித்தார்.

 

கொம்தாரில் நடைபெற்ற பினாங்கு2030 ஆறாவது ஆண்டு நிறைவு விழாவுடன் கொண்டாட்டத்தில் போது, ​​நிதி மற்றும் நில மேம்பாடு & பொருளாதாரம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இந்த விளக்கத்தை அளித்தார்.

 

“ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை, திட்டங்கள், செயலாக்கம் என இரண்டையும் தொடர்ந்து  பினாங்கு 2030 கோடிட்டுக் காட்டப்பட்ட முயற்சிகளின் முன்னேற்றம் மற்றும் சாதனைகள் குறித்து அறிக்கையிட மாநில அரசு அனைத்து பொறுப்புள்ள நிறுவனங்களையும் அழைத்து கலந்தாசிப்போம்.

 

“இந்த ஆண்டு, அது 73 சதவீதத்தை எட்டியுள்ளது என்பதை  மாநில அரசு கண்டறிந்துள்ளோம்,” என்று பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ்  விளக்கினார்.

 

இதனிடையே, பினாங்கு 2030 கொள்கையின் அடிப்படையில், ​​சில தரப்பினரால் மிக அதிகமாகக் கருதப்படும் சாதனை சதவீதம் குறித்தும் அவர் மேலும் விளக்கமளித்தார்.

 

“உதாரணமாக, இலகு இரயில் சேவை (எல்.ஆர்.டி) திட்டம் இந்த ஆண்டு மண்வேலைகள் தொடங்கப்படும். இது ஆறு ஆண்டுகளுக்குள் (2030 வரை) முடிக்கப்படாமல் போகலாம் அல்லது 2030 ஆம் ஆண்டில் நாம் நிறைவையடையலாம் என்றார்.

 

 

“இருப்பினும், பினாங்கு2030 வழிகாட்டல் குழுவால் நடத்தப்படும் கண்காணிப்பு கட்டத்தில், நாங்கள் தொடர்புடைய விஷயங்களின் அறிவிப்பு, பட்ஜெட் மற்றும் ஒப்பந்தம் (MRT கார்ப்பரேஷன் மூலம் முத்தியாரா எல்.ஆர்.டி திட்டத்தை செயல்படுத்துதல்) ஆகியவையை கண்காணிப்போம். இத்திட்டம் கூடிய விரைவில் செயல்பாடு காணும் என  கருதலாம், “ என்று சாவ் சூளுரைத்தார்.

 

எவ்வாறாயினும், பினாங்கின் முதலமைச்சராக பதவி வகிக்கும் வரையில், 15வது மாநிலத் தேர்தல் நிர்வாக ஆணையின் இறுதி வரை, முதியாரா  எல்.ஆ.ர்டி திட்டத்தின் வளர்ச்சி தொடர்ந்து கண்காணிப்பேன் என்று கொன் இயோவ் கூறினார்.

 

இது சம்பந்தமாக, மாநில முதலமைச்சரான சாவ், பினாங்கு2030 கொள்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, 2030-ஆம் ஆண்டுக்கு முன்பாக, தனது நிர்வாகம் 100 சதவீத நடைமுறைப்படுத்தல் இலக்கை அடையும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

 

தொடர்ந்து அனைத்துத் தரப்பினரும் முழு நேர்மையுடனும், முனைப்புடனும் பணிகளை மேற்கொண்டால், 2030ஆம் ஆண்டுக்கு முன் நிர்ணயித்த இலக்கில் 100 சதவீதத்தை இந்த நிர்வாகம் அடையும் என்று நான் நம்புகிறேன்,” என்று சாவ் தொடர்ந்து கூறினார்.

 

சமூக மேம்பாடு, சமூகநலன் மற்றும் இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர், லிம் சியூ கிம்; உள்ளூராட்சி மற்றும் மாநகர மற்றும் கிராமப்புற மேம்பாடு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெசன் எங் மோய் லாய்; 

இளைஞர், விளையாட்டு மற்றும் ஆரோக்கியம் ஆட்சிக்குழு உறுப்பினர், டேனியல் கூய் ஜி சென்; மாநில  செயலாளர், டத்தோ சுல்கிஃப்லி லாங்; மற்றும் மாநில நிதி அதிகாரி டத்தோ ஜபிதா சஃபர் ஆகியோர் கொம்தாரில் இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பித்தனர். 

 

மேலும், மாநில காவல்துறை தலைவர், டத்தோ ஹம்சா அகமது;  மலேசியா காவல்துறையின் (PDRM) பினாங்கு மாநிலத்தின் சிறப்புப் பிரிவின் தலைவர், டத்தோ வின்ஸ்டன் டான் தை வா; பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு  தலைமையக உதவிப் பிரிவு இயக்குநர், PgKB I கைரி சுலைமான் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

img 20240921 wa0023

 

பினாங்கு தெக் டோமிற்கு  இலவச நுழைவு, மினி கோளரங்கத்தின் இலவச காட்சிகள், வண்ணம் தீட்டுதல் மற்றும் ஓவியம் வரைதல் போட்டிகள், பல்வேறு ஆடைகள் மற்றும் அரசு நிறுவனங்களை அறிமுகப்படுத்தும் அறிவியல் கண்காட்சிகள் ஆகியவை பினாங்கு2030 கொண்டாட்டத்தின்  உற்சாகமான நிகழ்வுகளாகும்.

img 20240921 wa0025