“பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் குறித்த தனது நிலைப்பாட்டினை பலமுறை தெளிப்படுத்தியுள்ளார். பிரதமர் துறை அமைச்சர், டத்தோ டாக்டர் முஜாஹிட் யுசோப் ரவா அவர்களும் பேராசிரியரை தொடர்புக் கொண்டு கூடிய விரைவில் சந்திப்புக் கூட்டம் ஏற்பாடுச் செய்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பல தரப்பினர்களுடன் ஒன்றுக்கூடி தீர்வுக்காணப்படும் என பேராசிரியர் கூறியதாக” இன்று நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் தெரிவித்தார்.
“பேராசிரியர் இலங்கை அமைதி போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது மட்டுமின்றி ஆச்சே சுதந்திர அணியிலும் ஆலோசகராக இடம்பெற்றதை நன்கு அறிவோம்” என செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் முதல்வர் கூறினார் .
பேராசிரியர் ப.இராமசாமி ஸ்ரீ லங்கா நாட்டிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே நல்லிணக்க போராட்டத்தில் மட்டுமே
கலந்து கொண்டார்.