பினாங்கில் பிரசித்தி பெற்ற மாவுன்ட் மிரியம் புற்றுநோய் மருத்துவமனை (Mount Miriam Cancer Hospital) தனது கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை இவ்வாண்டு பிறை ஷான் ஆதரவற்ற இல்ல குழந்தைகளுடன் கொண்டாடியது. ஷான் ஆதரவற்ற இல்ல பதினெட்டு குழந்தைகள் மாவுன்ட் மிரியம் புற்றுநோய் மருத்துவமனைக்கு கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டத்திற்கு வருகையளித்திருந்தனர். இக்குழந்தைகளுக்காக கேளிக்கை விளையாட்டுகள், பரிசுப் பொருட்கள் மற்றும் உணவு பதார்த்தங்கள் போன்றவை பரிமாரப்பட்டன.
இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய தலைமை அதிகாரி தாம் வேய் வேய் அவர்கள் பத்தாவது ஆண்டாக இவ்வாண்டு கிறிஸ்மஸ் கொண்டாடப்படுவதாகக் கூறினார். ஒவ்வொரு ஆண்டும் தாம் வறுமையில் வாடுகின்ற அல்லது வசதிக்குன்றிய தரப்பினருடன் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடுவதாகக் கூறினார். இவ்வாண்டு பிறை ஷான் ஆதரவற்ற இல்ல குழந்தைகளை தேர்ந்தெடுத்த காரணம் இவ்வில்லம் சமுதாயத்திடம் முக்கியமாக தீவுப் பகுதியில் வாழ்வினரிடம் போதிய ஆதரவுகளை பெறுவதில்லை என்றார். எனவே, இக்குழந்தைகளை பட்டவேர்த் தாமான் இண்ராவாசேயிலிருந்து அழைத்து வந்து அவர்களுடன் அன்பை பரிமாரி கொள்வதாக மேலும் கூறினார்.
பிறை ஷான் ஆதரவற்ற இல்ல பொதுமக்களின் உதவிகளை நாடுகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த இல்ல பராமரிப்பு ரிம 7,000 செலவிடுகின்றனர். இந்நிலையை சமாளிக்க சமுதாய தொண்டு உணர்வு கொண்டவர்களின் உதவியை கோருகின்றனர். 7 வயது முதல் 20 வயது நிரம்பிய 20 குழந்தைகளுக்கு உதவ விரும்புவோர் ஷான் ஆதரவற்ற இல்ல நிர்வாகி திருமதி. சரஸ் பிள்ளையை 019-4714917 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.