பி.கே.பி அமலாக்கத்தில் எந்த துறை அல்லது தொழில் செயல்பட அனுமதி என அறிய இரு ஊராட்சி மன்றங்கள் தொடர்புக் கொள்ளவும் – ஜெக்டிப்

Admin

ஜார்ச்டவுன்- பினாங்கு மாநிலத்தில் ஜனவரி 13 முதல் 26 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருப்பதால் இக்காலக்கட்டத்தில் எந்த துறை அல்லது வியாபாரம் செயல்பட அனுமதி என்ற ஐயம் உள்ள தரப்பினர் பினாங்கின் இரு ஊராட்சி மன்றங்களான பினாங்கு மாநகர் கழகம்(எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) -ஐ தொடர்புக்கொள்ள வலியுறுத்துவதாக ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.

“பினாங்கு மாநில அரசு தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்) வெளியிட்ட பட்டியலின் அடிப்படையில் தான் சம்பந்தப்பட்ட துறைகள் செயல்பட அனுமதிக்கிறது. அதேவேளையில், தங்களின் வியாபாரம் அல்லது தொழில் செயல்பாடு அனுமதி குறித்த தகவல்  அறிய இரு ஊராட்சி மன்றங்களையும் தொடர்புக்கொள்ளலாம். ஊராட்சி மன்றங்கள் பெறும் புகார்கள் அல்லது தகவல் பற்றிய கூடுதல் விபரங்கள் பெற எம்.கே.என் மன்றத்திடம் பரிசீலனைச் செய்யப்படும்,” என 

மாநில உள்ளூராட்சி, வீடமைப்பு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார். 

தற்போது கோவிட்-19 தொற்று நோய் வழக்கு பினாங்கில் தினமும் அதிகமாக பதிவுப்பெறுவதால் இரு ஊராட்சி மன்றங்களும் அதன் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் இரட்டிப்பாக தீவிரப்படுத்த கட்டளையிடப்பட்டதாக, ஜெக்டிப் தெரிவித்தார். 

கோவிட்-19 போர்களத்தில் நாம் இன்னும் வெற்றி பெறாத நிலையில் அமலாக்கப் பிரிவின் கட்டளை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் (எஸ்.ஓ.பி) மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக்கொண்டார். 

இதன் மூலம் இத்தொற்றுநோயின் தாக்கத்தை குறைப்பதோடு மூத்தக்குடிமக்கள்,  குடும்ப உறுப்பினர்கள் என பொது மக்களை பாதுகாக்க வித்திடும். 

கோவிட்-19 தொற்று நோயின் போராட்டத்தில் முன் வரிசை பணியாளர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஆண்டும் தொடர்ந்து 

1,000 எம்.பி.பி.பி ஊழியர்களுக்கு உணவுப்பொட்டலங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

“பொது மக்கள் அனைவரும் சுய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏனெனில் தற்போது உள்நாட்டு மக்கள் குறிப்பாக சமூகத்தில் அதிகமாக இத்தொற்றுப் பரவுகிறது. இந்த தொற்றுக்கு இலக்கான வெளிநாட்டு தொழிலாளர்களின் 47 விழுக்காட்டைக் காட்டிலும் உள்நாட்டு மக்கள் 53 விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளனர்,” என எம்.பி.பி.பி மேயர் டத்தோ இயூ துங் சியாங் அறிவுறுத்தினார். 

பொழுதுபோக்கு பூங்காக்கள் இன்று (15/1/2020)தொடங்கி மக்கள் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் தங்கள் குடியிருப்பு வளாகங்களில் உடற்பயிற்சி செய்ய வலியுறுத்தப்படுகின்றனர். 

இதுவரை 1.36 மில்லியன் பரிசோதனைகள் மேற்கொண்டு பொது இடங்களில்  குறிப்பாக பொதுச் சந்தைகள், பேரங்காடி ஆகியவற்றில் பொது மக்கள் எஸ்.ஓ.பி-ஐ பின்பற்றுவதை உறுதிச்செய்யப்படுகிறது என நிருபரின் கேள்விக்கு ஜெக்டிப் இவ்வாறு பதிலளித்தார். 

பினாங்கு மருத்துவ பயிற்சியாளர்கள் சங்கம்(பி.எம்.பி.எஸ்) தன்னார்வ அடிப்படையில் இலவசமாக தடுப்பூசி போட இணக்கம் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 1.8மில்லியன் மக்கள் தொகை கொண்ட பினாங்கு மாநிலத்தில் தடுப்பூசி செலுத்த 200 கிளினிக் மையங்கள் பெருநிறுவன சமூக பொறுப்பு(சி.எஸ்.ஆர்) திட்டத்தின் கீழ் இலவசமாக ச் செயல்பட  இணக்கம் தெரிவித்ததாக ஜெக்டிப் கூறினார்.