புக்கிட் குளுகோர் தீபாவளி கொண்டாட்டம்

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தீபாவளி வாழ்த்து

புக்கிட் குளுகோரில் அமைந்துள்ள உடினி சுற்றுவட்டம் சாலையில் தீபாவளி பெருநாளை முன்னிட்டு அண்மையில் “தீபாவளி வாழ்த்துகள்” என்ற வண்ண விளக்குகளால் பொருத்தப்பட்டதை மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் மற்றும் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு.நேதாஜி இராயர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இப்புதிய மின் விளக்குகள் பொருத்த ரிம9,700 செலவிடப்பட்டதாக திரு.நேதாஜி இராயர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். பினாங்கிற்கு வருகையளிக்கும் சுற்றுப்பயணிகளை கவரும் நோக்கில் முதல் முறையாக இவ்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக மேலும் அவர் குறிப்பிட்டார். இதனை பிரத்தியேகமாக ஏற்பாடு செய்த ஶ்ரீ டெலிமா சமூக மேம்பாடு மற்றும் முன்னேற்ற கழக உறுப்பினர்களைப் பாராட்டினார்.