பினாங்கு நகராண்மைக் கழகம் கட்டிட துறையில் புதிய சகாப்தம் படைத்துள்ளது. 1/1/2015-ஆம் நாள் தொடங்கி கட்டிட திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பிரதான நபர் (Principal Submitting Person) இணையத்தளத்தின் உதவியோடு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் நகராண்மைக் கழகத்தினர் ஒவ்வொரு கட்டிட திட்டத்தின் வரைப்படம் வழங்குவதற்கும்; தகவல்கள் சேகரிப்பதற்கும்; குறுகிய நேரத்தில் சிறந்த சேவை வழங்வதற்கும் இலகுவாக இருக்கும் என வரவேற்புரையில் குறிப்பிட்டார் பினாங்கு நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ பத்தாயா பிந்தி இஸ்மாயில்.
பொதுவாகவே தொழிற்துறை மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் கட்டிட திட்டத்தின் அனுமதி அல்லது உரிமம் பெறுவதற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். எனவே, இந்தப் பிரச்சனைகளைக் களைவதற்கே புதிய கட்டிட திட்ட மேலாண்மை முறை அமலாக்கம் காண்கிறது என்றார் உள்ளூராட்சி, போக்குவரத்து மேலாண்மை மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்.
புதிய கட்டிடத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பிரதான நபர் இணையத்தளம் அல்லது நகராண்மைக் கழகத்திற்கு நேரடியாகச் சென்றும் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி அனைத்து விண்ணப்பங்களும் இணையத்தளம் மூலம் அனுப்ப வேண்டும் என்றார். இணையத்தளத்தைப் பயன்படுத்தும் புதிய கட்டிட மேலாண்மை முறையினை அனைவருக்கும் பல்லூடக வெண்திரை காட்சியில் ஒளிப்பரப்பியதோடு வருகையாளருக்கும் தெளிவுப்படுத்தினார் கட்டிட துறையின் தலைமை நிர்வாகி இயூ துங் சியாங்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);