புதிய கற்காரை பாலம் பொது போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது

செபராங் பிறை கற்காரை பாலம் பொது போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
செபராங் பிறை கற்காரை பாலம் பொது போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

செபராங் ஜெயாவில் அமைந்துள்ள தாமான் மெலோர் மற்றும் எமாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் பொதுமக்கள் எதிர்நோக்கும் சாலை போக்குவரத்து பிரச்சனைக்குத் தீர்வுக்காணும் பொருட்டு பினாங்கு மாநில அரசின் முயற்சியில் புதிய கற்காரை பாலம் (Jambatan Konkrit) நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இத்திட்டத்தின் புதிய கற்காரை பாலத்தை பொது போக்குவரத்துக்கு அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.

தாமான் மெலோர் மற்றும் மாஸ் அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் பொதுப்பணி, பயன்பாடு மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் ஹொக் செங் அவர்களிடம் அவ்வட்டார சாலை போக்குவரத்து பிரச்சனை எடுத்துரைத்ததைத் தொடர்ந்து மாநில அரசு செபராங் பிறை நகராண்மைக் கழகத்துடன் இணைந்து இம்முயற்சியை எடுத்ததாகச் செய்தியாளர் சந்திப்பில் கூறினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். கடந்த 1 பிப்ரவரி பொதுமக்களின் ஆலோசனை கிடைக்கப்பெற்ற பின்னர் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு ரிம195,137.50 பொருட்செலவில் இத்திட்டம் அமலுக்கு வருவது பாராட்டக்குரியதாகும். சுமார் 14 வாரங்களில் சாலை பராமரிப்பு, வடிக்கால் அமைப்புடன் இப்பாலம் நிறுவப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டு திறக்கப்பட்டதாகக் கூறினார்.

இத்திட்டத்தின் மூலம் ஜாலான் ஊடாவில் ஏற்படும் சாலை போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுக்காண முடியும். மாற்றுவழி சாலையாக வாகனமோட்டிகள் இப்பாலத்தை பயன்படுத்தலாம் என செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் ஹொக் செங் கூறினார். பினாங்கு மாநில அரசு பொதுமக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், பாகான் நாடாளுமன்ற தொகுதியில் பி.பட்டு எனும் புதிய சாலை ரிம 3,665,330 செலவிலும், ஜாலான் பாகான் 29 (ரிம 3,298,725), ஜாலான் சீராம் சாலை விரிவாக்கம் (ரிம 8.7 கோடி) , சூங் ஹுவா சீனப்பள்ளி முன்புறம் உள்ள சாலை (ரிம 996,410) என மொத்தமாக ரிம 18.66 கோடி போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக விவரித்தார் மாநில முதல்வர். இந்நிகழ்வில் செபராங் பிறை நகராண்மைக் கழக அதிகாரி டத்தோ மைமுனா முகமது சாரிப் மற்றும் சிறப்பு பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);