புதிய குடும்ப மாது தங்கத் திட்டம் மலர்ந்தது.

Admin

பினாங்கு மக்கள் கூட்டணி அரசு தனது சிறந்த பொருளாதார நிர்வகிப்பின் பலனாக ஒவ்வோர் ஆண்டும் வரவு செலவுத் திட்டத்தில் மிகை நிதியைப் பெற்றுச் சாதனை புரிந்து வருகிறது. இந்த வெற்றியினால்தான் பொருளாதார அடிப்படையில் மக்களுக்குத் துணைபுரியும் பொருட்டு மாநில அரசு பல தங்கத் திட்டங்களை அறிமுகம் செய்தது. மக்கள் நலன் பேணும் இத்தங்கத் திட்டத்திற்காக மாநில அரசு 2008-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை ரிம 120.36 மில்லியன் செலவிட்டுள்ளது என்றால் மிகையாகாது.
மாநில அரசு இந்தத் தங்கத் திட்டத்தின் வழி ஆண்டு 1 மற்றும் 4 பயிலும் ஆரம்பப் பள்ளி மாணவர்களும் படிவம் 1 மற்றும் படிவம் 4 பயிலும் இடைநிலைப் பள்ளி மாணர்களும் இந்தத் தங்க மாணவர் திட்டத்தின் வழி ரிம100 ஊக்குவிப்புத் தொகை பெறுவர். 2011-ஆம் ஆண்டு தொடங்கி பிறந்த குழந்தைகளோ தங்கக் குழந்தை திட்டத்தின் கீழ் ரிம200 உதவித் தொகை பெறுவர். மேலும் தங்க மூத்தகுடிமக்கள், தனித்து வாழும் தாய்மார், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஊக்குவிப்புத் தொகை வழங்குவது வெள்ளிடைமலையாகும் .

ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் மற்றும் ஆதரவாளர்கள்  பொது மக்கள் உதவித் தொகை பெற்றுக் கொள்ள உதவினர்.
ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் மற்றும் ஆதரவாளர்கள் பொது மக்கள் உதவித் தொகை பெற்றுக் கொள்ள உதவினர்.

பினாங்கு வாழ் இல்லத்தரசிகளின் தியாகத்தை அங்கீகரிக்கவும் அவர்களுக்கு உதவும் வகையில் மாநில அரசு இந்த ஆண்டு தொடங்கி வேலை செய்யாத குடும்ப மாதுகளுக்கு ஊக்குவிப்புத் தொகையாக ரிம100 என அறிவித்தது .பினாங்கு மாநில முழுவதிலும் இந்த ஆண்டு தொடங்கி அக்டோபர் மாதம் வரை 40,589 இல்லத்தரசிகள் இத்திட்டதில் பதிவுச் செய்துள்ளனர் .

படம் 1: குடும்ப மாது தங்கத் திட்டத்திற்கானப் பணத்தைப் பெற்றுக் கொண்ட பொது மக்களுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஹொங் ஹொன் வேய்.
படம் 1: குடும்ப மாது தங்கத் திட்டத்திற்கானப் பணத்தைப் பெற்றுக் கொண்ட பொது மக்களுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஹொங் ஹொன் வேய்.

இன்றைய பொருளாதார சூழலில் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திச் செய்து கொள்வதில் பெறும் சவாலை எதிர்நோக்குகின்றனர்.. உயர்வு கண்டு வரும் பொருட்களின் விலைகள் குறிப்பாக ஏழ்மை நிலையிலும் நடுத்தர வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்குப் பெரும் சுமையாக அமைந்து வருவதால் அவர்களின் செலவுச் சுமையைக் குறைக்கும் பணியை மாநில அரசு ஆண்டுதோறும் தவறாது செய்து வருகிறது என்றால் மிகையாகாது.

பினாங்கு மாநில வாழ் இல்லத்தரசிகள் தங்களின் உதவித்தொகை பெற்றுக்கொள்ள தங்கள் தொகுதிகளில் அங்கிகரிக்கப்பட்ட மலயன் வங்கிகளில் பெற்றுக் கொண்டனர். பொது மக்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் மக்கள் கூட்டணி அரசியல் தலைவர்கள் நேரடியாகச் சென்று உதவி புரிந்தனர். அவ்வகையில் பாகான் நாடாளுமன்ற தொகுதிக்கு நமது மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன் அவர்களும் உடன் சென்று பார்வையிட்டனர்.

படம் 2: உதவித் தொகை பெற்றுக்கொண்ட இந்திய பெண்மணி டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோவிற்கு நன்றி தெரிவித்தார் .
படம் 2: உதவித் தொகை பெற்றுக்கொண்ட இந்திய பெண்மணி டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோவிற்கு நன்றி தெரிவித்தார் .

மேலும், டத்தோ கெராமாட் சட்டமன்ற தொகுதியில் 586 குடும்ப மாதுகளுக்கு மலயன் வங்கியிலிருந்து ஊக்கவிப்புத் தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் சிங் டியோ கலந்து கொண்டார். மேலும், ஆயிர் ஈத்தாம், ஆயிர் பூத்தே , ஶ்ரீ டெலிமா, மற்றும் பினாங்கு மாநில பல தொகுகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதவிகரம் நீட்டினர் என்பது பாராட்டக்குறியதாகும் . பினாங்கு வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உன்னத நோக்கில் மக்கள் கூட்டணி அரசு பல சமூகப் பொருளாதார சார்ந்த செயற்திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.