சமூக முன்னேற்ற மற்றும் பாதுகாப்பு கழகத்தின் கீழ் புதிய தன்னார்வ ரோந்து கழகம் உதயம் கண்டது என அறிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். இப்படையினர் மலேசிய காவல் படை வலியுருத்தும் சமூக காவல் படையாக இடம்பெற்று குற்றங்களைக் குறைக்க துணைபுரிவர் என்றார்.
சமூகநலம், ஒற்றுமை மற்றும் சமூக உறவுகள் எனும் பணியகத்தின் கீழ் அமைக்கப்பட்ட தன்னார்வ ரோந்து கழகம் விரையாக செயல்படும் மீட்பு மற்றும் தடுப்பு அணியினராகத் திகழ்வர். இக்கழகம் “உள்ளூர் மக்கள், சிறந்த பாதுகாப்பு காவலர்” என்ற கொள்கைக்கு ஏற்ப அமைகிறது என செய்தியாளர் கூட்டத்தில் முதல்வரும் அயர் பூத்தே சட்டமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் கூறினார்.
இந்நிகழ்வில், முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமது ரஷிட் ஹஸ்னோன் மற்றும் சமூகநல & சமூக பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ கலந்து கொண்டனர்.
“பிபிஎஸ்” என்று அழைக்கபடும் தன்னார்வ ரோந்து படை குறித்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருப்பதால் அதன் பற்றி விமர்சனம் செய்ய தாம் விரும்பவில்லை என்றார் முதல்வர்.
பொது மக்கள் அனைவரும் ஜேகேகேகே(JKKK) கீழ் ஒன்றினைந்து குடியிருப்புப் பகுதி பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டும் என்றார்.
துணை பிரதமர் “பிபிஎஸ்” என்ற படை சட்டவிரோத அமைப்பு என பினாங்கு உயர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு 30 ஆகஸ்டு அன்று 157 “பிபிஎஸ்” உறுப்பினர்களை காவல் துறையினர் கைதுச் செய்தனர். எனவே நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கப்பெறும் வரை “பிபிஎஸ்” நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.