ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிம் சி மற்றும் பைராம் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்றக் கழக ஏற்பாட்டில் புதிய நூலகம் துவக்க விழாக் கண்டது. இக்கழகம் ஜாவி பகுதியில் வாழும் இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல பயனுள்ள நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார். இப்புதிய நூலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடப் புத்தகங்கள், தேர்வு அணுகுமுறை புத்தகங்கள், கதைப்புத்தகங்கள் மற்றும் சமய நூல்கள் இடம்பெறுவதாகக் கூறினார் பைராம் கழகத் தலைவர் திரு ஜெகன்.
இப்புதிய நூலகம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை மணி 5.00 தொடங்கி இரவு மணி 9.00 வரை மாணவர்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும். இந்நூல் நிலையம் பைராம் முன்னேற்றக் கழகத்தின் முழுப் பொறுப்பில் இயங்கும். ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கல்வியே அடித்தளம், எனவே இந்திய மாணவர்கள் இந்நூலகத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி நன்மை பெற வேண்டும்.
இன்றைய தினத்தில் வருகையளித்த கலிடோனிய தோட்டம், விக்டோரியா தோட்டம், பிஸ்தாரி அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியை சார்ந்த 113 ஏழை மக்களுக்குத் தீபாவளி பரிசுக்கூடை வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர் . ஏழை மக்களுக்கு அடிப்படை மளிகை பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேலும் வருகையளித்த அனைவரும் தீபாவளி விருந்தோம்பலிலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.} else {