புதிய மின் தூக்கி திறப்பு விழாக்கண்டது

ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ தனது டத்தோ கெராமாட் தொகுதி நிதி ஒதுக்கீடு மூலம் விஸ்மா லம் ஹொங் கட்டடத்திற்கு புதிய மின் தூக்கி பொருத்தினார். இந்த மேம்பாடுத் திட்டத்திற்குத் தனது டத்தோ கெராமாட் தொகுதி நிதி ஒதுக்கீடு மூலம் ரிம40,000 வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சிக்குழு உறுப்பினர்  திரு ஜெக்டிப் சிங் டியோ காசோலை விஸ்மா லாம் ஹொங் சங்கத்திடம் வழங்கினார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ காசோலை விஸ்மா லாம் ஹொங் சங்கத்திடம் வழங்கினார்.

இதற்கு முன்பு இந்தக் கட்டடத்தில் மின் தூக்கி வசதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினருமான திரு ஜெக்டிப் சிங் புதிய மின் தூக்கியைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். மேலும், இத்திட்டத்திற்கான காசோலையும் வழங்கினார். விஸ்மா லாம் ஹொங் சங்கத் துணை தலைவர் நியோ மிங் சிவான் உடன் கலந்து கொண்டார்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);