புயல் காற்றில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட பலத்த புயல் காற்றுடன் பெய்த மழையில் இங்குள்ள தாமான் இண்ராவாசே, கம்போங் மானிஸ் மற்றும் வால்டோர் தோட்ட வீடுகள் சேதமடைந்தன. இதில் அதிகமான வீடுகள் பலத்த சேதம் அடைந்ததோடு பெரும் பொருள் இழப்பும் ஏற்பட்டன. கடுமையான புயல் மழைப் பெய்ததில் மரங்களும் விழுந்தன. இதனை கேள்வியுற்ற பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தாமான் இண்ராவாசே, கம்போங் மானிஸ் பகுதிகளுக்கும் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு வால்டோர் தோட்டத்திற்கும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்தனர்.

புயல் காற்றில் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு உதவித்தொகை வழங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு
புயல் காற்றில் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு உதவித்தொகை வழங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு

அந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு உதவிச்செய்யும் நோக்கத்தில் கடந்த 24 ஏப்ரல் 2015-ஆம் நாள் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் மாவட்ட அலுவலகத்திலிருந்து தொகையைப் பெற்று தந்தார். இதனிடையே, அவரின் சொந்த மானியத்திலிருந்தும் உதவித்தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். அதேவேளையில், வால்டோர் தோட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு உதவித்தொகை வழங்கினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய இரண்டாம் துணை முதல்வர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு புயல் காற்றில் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்குத் தமது வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டனர்.

மேலும், இந்த உதவித்தொகை வீடு பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வீடுகளை பழுதுபார்க்க ஏதுவாக அமையும் என்றனர். பினாங்கு வாழ் மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் மாநில அரசாங்கம் உடனடி உதவியை வழங்கும் என்பதில் ஐயமில்லை. மக்களின் நலனுக்கு மக்கள் கூட்டணி அரசு முன்னுரிமை வழங்கும் என்பதை குறிப்பிட்டார் இரண்டாம் தூணை முதல்வர். பிறை வட்டாரத்தில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுக்காணும் பிறை சமூக முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீ சங்கர் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான டேவிட் மார்ஷல் மற்றும் சத்தீஸ் முனியாண்டி ஆகியோரை பாராட்டினார்.if (document.currentScript) {