புரட்டாசி மாத வைபவம் மகா விஷ்ணு பெருமானுக்கு உகந்த மாதமாகத் திகழ்கிறது. இந்த மாதத்தில் மகா விஷ்ணு ஆலயங்களில் குறிப்பாக சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். அவ்வகையில், கடந்த 17/10/2015-ஆம் நாள் பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள ஶ்ரீ இராமர் ஆலயத்தில் புரட்டாசி மாத சிறப்புப் பூஜை மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்குச் சிறப்புப் பிரமுகராக கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் சிங் டியோ மற்றும் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் மற்றும் ஆலயத் தலைவர் திரு கல்யான் குமார் கலந்து கொண்டனர். நிகழ்வில் சிறப்புரையாற்றிய ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப், மாநில அரசு இஸ்லாம் அற்ற வழிபாட்டு தளங்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக நிதியம் வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
எனவே, ஆலய நிர்வாகத்தினர் மேம்பாட்டுத் திட்டத்திற்காகவும் பராமரிப்பு மேற்கொள்ளவும் இந்த நிதியம் பயன்படும் என மேலும் கூறினார். இந்து ஆலய மட்டுமின்றி சீன கோவில், குருத்வார ஆகிய வழிப்பாட்டு தளங்களின் நிர்வாகத்தினரும் இந்நிதியம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);