அண்மையில் பினாங்கு கொண்வெண்ட் கிரீன் லெண்ட் இடைநிலைப்பள்ளியின் மற்றொரு புதிய கட்டிடம் திறப்பு விழாவில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கலந்து கொண்டார். இப்பள்ளியில் கூடுதல் வசதி இல்லாமையால் இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. இவ்வாண்டு தொடங்கி இப்புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவின் மூலம் ஒரே பிரிவாக கற்றல் மற்றும் கற்பித்தல் இப்பள்ளியில் நடைபெறும் என தமதுரையில் குறிப்பிட்டார் மாநில முதல்வர்.
பினாங்கு கொண்வெண்ட் கிரீன் லெண்ட் இடைநிலைப்பள்ளியில் 982 மாணவர்கள், 63 ஆசிரியர்கள் மற்றும் 10 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். கொண்வெண்ட் பள்ளிகளில் இனம்,மதம், மொழி என வேறுபாடும் பாகுபாடுமின்றி மாணவர்களுக்கு சிறந்த சேவையை வழங்க ஆசிரியர்கள் முழுமூச்சாக முற்படுகின்றனர். அதோடு, பினாங்கில் பெண்களுக்கு கல்வி மட்டுமே மேன்மையடைய சிறந்த துணையாக அமைகின்றது. பினாங்கு மாநில அரசு பெண்களின் வளர்ச்சிக்கும் பங்களிப்புக்கும் என்றும் ஆதரவு நல்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
‘ ஓர் ஆணுக்கு கற்று கொடுக்கும் போது தனி ஒருவரை உருவாக்குகிறோம்; அதுவே ஒரு பெண்ணுக்கு கற்று கொடுக்கும் போது ஒரு குடும்பத்துக்கு கற்று கொடுப்பதுக்கு ஈடாகும்‘ என புகழாரம் சூட்டினார் மாநில முதல்வர்.