பொதுச் சந்தை பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் – ஜக்டிப்

Admin

ஜார்ச்டவுன் – மாநில இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்டிப் சிங் டியோ, முன்னதாக ஊராட்சி ஆட்சிக்குழு உறுப்பினராகப் பணியாற்றும் போது பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ஆகிய இரண்டு மாநில ஊராட்சி மன்றங்கள் ஆற்றிய சேவைக்கு நன்றித் தெரிவித்தார்.

அண்மையில் குவாந்தான் சாலை, பொதுச் சந்தைக்கு வருகையளித்த போது ஜக்டிப் அவர்களுக்கு நன்றித் தெரிவித்தார்.

“நான் அவர்களுடன் (எம்.பி.பி.பி மற்றும் எம்.பி.எஸ்.பி) ஆட்சிக்குழு உறுப்பினராகப் பணியாற்றும் போது, ஐந்தாண்டுகளாக உள்ளூர் அரசாங்கத்தின் கீழ் அவர்கள் உண்மையிலேயே கடினமாக உழைத்தனர், என்றார்.

“மாநிலத்தின் இரு ஊராட்சி மன்ற அனைத்து ஊழியர்களுக்கும் எனது நன்றியைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

“நகராட்சி அஸ்தஸ்த்தைக் கொண்ட எம்.பி.எஸ்.பி-ஐ மாநகர் கழக தரத்தைப் பெற பங்களிப்பு வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
“மாநகர் அந்தஸ்து கொண்ட இரண்டு மாநகர் கழகத்தை உள்ளடக்கிய ஒரே மாநிலம் பினாங்கு தான்,” என்று ஜக்டிப் கூறினார்.

டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜக்டிப், பொதுச் சந்தைகள் சிறப்பாகப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய உள்ளூர் மாநகர் கழகங்கள் தங்கள் முயற்சிகளைத் தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“பொதுச் சந்தைகள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுவது அவசியம்.
“தீவுப் பகுதியில், பினாங்கு மாநகர் கழகத்தின் கீழ் ரிம82 மில்லியன் செலவில் மொத்தம் 24 பராமரிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

“கடந்த ஜூன் மாதம் நிறைவுச் செய்யப்பட்ட குவாந்தன் சாலை, பொதுச் சந்தையின் குழாய் அமைப்பு பராமரிப்புப் பணிகளுக்காக, எம்.பி.பி.பி ரிம170,000 செலவிட்டுள்ளது.

“இம்மாநிலத்தின் இரண்டு மாநகர் கழகங்களும் தொடர்ந்து பொதுச் சந்தைகளில் அவற்றின் பராமரிப்புப் பணிகளைத் தொடரும் என்பதை அறிவேன்,” என்று அவர் கூறினார்.
பினாங்கில் மொத்தம் 61 பொதுச் சந்தைகள் இருப்பதாக அறியப்படுகிறது.

இதற்கிடையில் ஜக்டிப், மத்திய அளவில் உள்ள ஒற்றுமை அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து, பெரிய அளவிலான திட்டங்களைச் சுமூகமாக செயல்படுத்துவதை உறுதி செய்யும், என்றார்.

மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள சுங்கை பினாங்கு வெள்ளத் நிவாரணத் திட்டத்தை (RTB சுங்கை பினாங்கு) மேற்கோள் காட்டி, இந்த ஒற்றுமை அரசாங்கத்துடன் இப்போது அத்தகைய முயற்சிகளில் சுமூகமான விவாதங்கள் மற்றும் ஒத்துழைப்பை அனுமதிக்கிறது என்று அவர் விளக்கினார்.
ஜாலான் பி.ரம்லீ பகுதியில் வெள்ள நிவாரணத் திட்டத்தை மேம்படுத்துவதில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக, ஜக்டிப் கூறினார்.

வெள்ள நிவாரணத் திட்டத்தின் கீழ் சாலை மட்டங்களை உயர்த்துதல் மற்றும் வடிக்கால் அமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.