பொதுவாகவே வறுமை, முதுமை மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையில் வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனினும் சுங்கை குளுகோர் பகுதியில் வாழும் பொது மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம், மீது அதிக கவனம் செலுத்தி உதவிக்கரம் நீட்டுகின்றனர் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் இராயர் மற்றும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால் சிங் .
அத்தொகுதியில் வாழும் பல ஆதரவற்ற பொது மக்களுக்கு பல அரிய உதவுயை நல்குகின்றனர். உதாரணமாக பாழடைந்த வீட்டில் வசித்த ஊனமுற்ற ரகுமான் இப்ராஹிமின் வீட்டை மறுசீரமைப்புச் செய்து கொடுத்தார் இராயர். ரகுமானை நேதாஜி இராயர் மட்டுமின்றி திரு ராம் கர்பால் மற்றும் கேலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் கடந்த 21/1/2017-ஆம் நாள் நேரில் சென்று சந்தித்தினர்.
“பொது மக்கள் மாற்றத்தை விரும்பிகின்றனர் அதேவேளையில் மோசடித்தனம் மிகுந்த ஆட்சியை வெறுக்கின்றனர். நாம் இனம், மத பேதமின்றி ஒன்றிணைந்து ஐக்கிய மலேசிய பூர்வீக அமைப்பு சங்கத்துடன் இணைந்து போராட வேண்டும்” என லிம் கிட் சியாங் மக்களுக்கு வலியுறுத்தினார். முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தலைமையில் அமைக்கப்பட்ட சங்கத்தைக் குறிப்பிட்டார்.
இராயர், லிம் மற்றும் ராம் கர்பால் மோட்டார் வண்டியைப் பயன்படுத்தி மக்களைச் சந்திக்க நேரில் சென்றனர். சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் தனது தொகுதியில் அடிக்கடி பொது மக்களைச் சந்திப்பதோடு அவர்களின் தேவைகளுக்கு உடனடி உதவிக்கரம் நீட்டுவதால் பொது மக்களிடையே அதிக பிரபலமாகவும் திகழ்கின்றார்.
தனித்து வாழும் தாயாரான ரொஹயா வீட்டின் கூரையை சீரமைக்க திரு இராயர் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும் பாக் மாலிக் மற்றும் மாக் பிபி ஆகிய மூத்தக்குடிமக்களின் உடல் நலம் குறித்து இரு சக்கரநாற்காலி வழங்கி உதவியுள்ளார்.
எனவே, நம்பிக்கை கூட்டணி அரசின் கீழ் செயல்படும் ஆட்சிமுறை மக்களுக்குப் பல நன்மையே வித்திடும் என்றார் லிம்.