மக்கள் கூட்டணி அரசின் தங்கத் திட்டச் செலவினங்கள்

Admin

2008-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் அமர்ந்த பினாங்கு மக்கள் கூட்டணி அரசு மக்கள் நலன் பேணும் சிறந்த ஆட்சி முறையைக் கடைபிடித்து வந்தது என்பது வெள்ளிடைமலையாகும். மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங் தலைமைத்துவத்தில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களால் பொருளாதார மாற்றம் கண்ட பினாங்கு மாநிலம் துரித வளர்ச்சியும் மேம்பாடும் கண்டு மலேசியாவில் குன்றின் மேலிட்ட விளக்காகத் திகழ்ந்து வருகிறது என்றால் அது மிகையாகாது.

வசதி வாய்ப்பற்ற பொருளாதார நலிவுற்ற மக்களுக்கு உதவி புரிவதே மக்கள் கூட்டணி அரசின் தலையாய கொள்கையாக விளங்குகிறது. அதன் பொருட்டே 2010-ஆம் ஆண்டு தொடங்கி மாநில அரசு பல தங்க உதவித் திட்டங்களை அறிமுகம் செய்தது. பினாங்கில் வாழும் மூத்த குடிகளை அங்கிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஆண்டு தோறும் ரிம100 வழங்கி கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து, தனித்து வாழும் தாய்மார்களுக்கும் ரிம100 உதவித் தொகை வழங்கப்பட்டது. பினாங்கின் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கும் ரிம100 வழங்கப்பட்டது. மேலும், மூத்த குடிகளின் ஈமச் சடங்கு செலவினைக் குறைக்கும் வகையில் அரசு அவர்களின் வாரிசுகளுக்கு ரிம்1000 உதவித் தொகை வழங்கி ஆதரவளித்தது. அதுமட்டுமன்றி 2011-ஆம் தொடங்கி பிறந்த தங்கக் குழந்தைகளுக்கு ரிம200 அன்பளிப்புத் தொகை வழங்கப்பட்டது. ஆண்டு 1 மற்றும் 4 பயிலும் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும், படிவம் 1 மறும் 4 பயிலும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் ரிம 100 உதவித் தொகை வழங்கப்பட்டது. இத்தங்க உதவித் திட்டத்தில் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கையையும் செலவினங்களையும் கீழ்க்காணும் அட்டவணையில் காணலாம்.

 

தங்க உதவித் திட்டங்கள்

ஆண்டு

(எண்ணிக்கை/ செலவினம்)

2008

2009

2010

2011

2012

மொத்தம்

மூத்த குடிகள்

(RM100)

108,644/

ரிம10,864,400

122,689/

ரிம12,268,900

132,997/

ரிம13,299,700

364,330/

ரிம36,433,000

மூத்த குடி வாரிசுகள்  (RM1000)

1,472/ ரிம1,472,000

3,653/ ரிம3,653,000

4,624/ ரிம4,624,000

9,749/ ரிம9,749,000

தனித்து வாழும் தாய்மார்கள்       (RM100)

4,224/            ரிம 422,400

7,315/           ரிம 731,500

11,539/         ரிம 1,153,900

தங்கக்குழந்தை    (RM200)

13,976/         ரிம 2,795,200

13,976/         ரிம 2,795,200

மாற்றுத் திறனாளி ‘OKU’ (RM100)

5,289/           ரிம 528,900

6,247/            ரிம 624,700

11,536/         ரிம 1,153,600

தங்க மாணவர் (ஆண்டு 1 &  4, படிவம் 1 &4) (RM100)

13,467/         ரிம 1,346,700

13,467/         ரிம 1,346,700