மத்திய அரசு கோவிட் -19 தடுப்பூசி பெறுவதை காட்டயமாக்க ஆய்வு செய்ய வேண்டும் – ஜெக்டிப்

Admin

 

ஜார்ச்டவுன் – பினாங்கு உள்ளாட்சி, வீட்டு வசதி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கோவிட்-19 தடுப்பூசியை கட்டாயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆய்வு செய்யுமாறு வலியுறுத்தினார்.

கோவிட்-19க்கு எதிரான போர்
களத்தில் வெற்றி பெற இன்னும் நீண்ட காலம் உள்ள நிலையில் பொது மக்கள் தடுப்பூசி போட தங்களை பதிவு செய்வது அவசியம் என்றும் அவர் கூறினார்.

“கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக நாங்கள் ஒவ்வொரு நாளும் இங்கு களத்தில்  இறங்குகிறோம்.

“இருப்பினும், சில தரப்பினர் இன்னும்  தடுப்பூசி போட பதிவு செய்ய விரும்பாமல்  இருக்கும்போது தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவதில் அர்த்தமில்லை.

பினாங்கு கோவிட்-19 பரிசோதனை (பி.எஸ்.சி -19) மற்றும் வியாபாரிகள் மற்றும் அங்காடி வியாபாரிகளுக்குப் பிரத்தியேகமாக
நடமாடும் தடுப்பூசி செலுத்தும் திட்டம்(Movak) போன்ற பல்வேறு வகையான திட்டங்கள் வழிநடத்தப்படுகிறது.

“இன்னும் தடுப்பூசி போடாதவர்களால்  தடுப்பூசி போடப்பட்டவர்கள் பாதிப்பை எதிர்நோக்கலாம்,” என்று   ஸ்ரீ பினாங்கில் அரங்கத்திற்கு வருகையளித்தப்போது இவ்வாறு கூறினார்.

மத்திய அரசு குறிப்பாக சுகாதார அமைச்சகம், கோவிட்-19 க்கான பதிவை கட்டாயமாக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

“பல நாடுகள்  கோவிட்-19 தடுப்பூசி போடுவதை
கட்டாயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றன. ஏனெனில், இது சட்டப்பூர்வமான விவகாரமாக திகழ்கிறது.

ஆகஸ்ட்,30 முதல் செப்டம்பர்,2 வரை வெற்றிகரமாக நடைபெற்ற Movak
திட்டத்தை கூடுதலாக நான்கு நாட்களுக்குத் தொடர பினாங்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று ஜெக்டிப் அறிவித்தார்.

“முதல் Movak திட்டத்தில் 11,000 வியாபாரிகள், அங்காடி வியாபாரிகள் மற்றும் அவர்களின் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

“மாநில அரசு வருகின்ற செப்டம்பர்,9 முதல் 12 வரை Movak 2.0  திட்டத்தை தொடர  ஒப்புதல் அளித்துள்ளது.

“Movak 2.0 காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை  டத்தோ ஹாஜி அஹ்மத் படாவி அரங்கம் (பெருநிலம்) மற்றும்  ஸ்ரீ பினாங்கு அரங்கம் (பினாங்கு தீவு) ஆகிய இடங்களில் நடைபெறும்.

“Movak 2.0 மூலம் சுமார் 5,200 வியாபாரிகள்  மற்றும் அங்காடி வியாபாரிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

பினாங்கு  மாநகர் கழக மேயர் டத்தோ இயூ துங் சியாங் அவர்களும் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.