மத்திய அரசாங்கம் பொது மக்கள் வீடு வாங்குவதற்கு விண்ணப்பிக்கும் வங்கி கடனுதவி விதிமுறைகளை தளர்த்துவதோடு, திரும்பி செலுத்தும் கடனுதவி வட்டி விகிதமும் குறைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ.
குயின்ஸ்பே பேரங்காடியில் நடைபெற்ற மலேசிய இரண்டாம் நிலை சொத்து கண்காட்சியில் (MASPEX2016) கலந்துரையாடப்பட்ட பரிந்துரைகளில் ஒன்று என செய்தியாளர் சந்திப்பில் கூறினார். வங்கியில் வீடமைப்புக் கடனுதவிப் பெற சிரமம் ஏற்படுவதால் சொத்துடைமை பரிமாற்றத்தில்(விற்பனை மற்றும் கொள்முதல்) சரிவு ஏற்படுதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
“வங்கியில் சொத்துடைமை வாங்க சமர்ப்பிக்கப்படும் 60% விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால் நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, உள்ளூராட்சி அமைச்சர் மேம்பாட்டாளர்களுக்கு ரொக்கப் பண கடனுதவி வழங்க உரிமம் வழங்க எண்ணம் கொண்டுள்ளதாக எடுத்துரைத்தார் திரு ஜெக்டிப்.
அமைச்சர் குறிப்பிட்ட இந்தப் பரிந்துரை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் அமைச்சரவையில் பொது விவாதம் செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார்.அமைச்சரின் பரிந்துரை அமல்படுத்தப்பட்டால் முதல் வீடு வாங்குநர் 18% வட்டி செலுத்தும் நிலைமைக்குத் தள்ளப்படுவர்.
ஒரு வருடத்திற்கு வங்கி கடனுதவி பெறுவோர் ‘கடனுதவி வழங்கும் சட்டம், 1951,’ ஏற்ப உத்தரவாத கடன் பெறுநருக்கு 12% வட்டி அதே வேளையில் உத்தரவாதமின்றி கடன் பெறுநருக்கு 18% வட்டி விகிதம் மட்டுமே விதிக்க முடியும்.
மலேசிய சொத்துடைமை முகவர் நிறுவனத் தலைவர் மாக் சாவ் கடந்த 2013 முதல் 2015 வரை ஆடம்பர அடுக்குமாடி மற்றும் அடுக்குமாடி வீடுகள் கொள்முதலில் சரிவு ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இந்த ஆண்டு முதல் தவணையில் (ஜனவரி – ஏப்ரல்) 537 அடுக்குமாடி வீடுகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் 22% வீட்டு கொள்முதலில் சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);