செபராங் பிறை நகராண்மைக் கழகம் மற்றும் “டிரீம் சிட்டி” தனியார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மனிதநேய கார் நிறுத்தும் பிரச்சாரம் (Kempen Memarkir Dengan Bertimbang Rasa) அதன் தலைவர் டத்தோ மைமுனா முகமது சாரிப் அவர்களால் அதிகாரப்பூர்வமாக துவக்க விழாக்கண்டது. இப்பிரச்சாரம் உடல் ஊனமுற்றோர் வாகன நிறுத்தும் இடத்தில் பொறுப்பற்ற தரப்பினர் நிறுத்துவதை எதிர்த்து ஆரப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மனிதநேயத்துடன் உடல் ஊனமுற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கியுள்ள கார் நிறுத்தும் இடங்களை பயன்படுத்துவதை தவிர்க்கும் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமாக அமையும் என தமதுரையில் அறிவித்தார் செபராங் பிறை நகராண்மைக் கழக தலைவர் டத்தோ மைமுனா.
இப்பிரச்சாரத்தின் தொடக்கமாக செபராங் பிறையில் காணப்படும் பேரங்காடிகளின் வாகன நிறுத்துமிடம் மற்றும் பொது வாகன நிறுத்துமிடம் என ஆய்வு நடத்தப்பட்டது. இதில் உடல் ஊனமுற்றோர் வாகனம் நிறுத்தும் இடங்களை பயன்படுத்தியவர்களின் வாகனங்கள் துணியால் மூடப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது செபராங் பிறை நகராண்மைக் கழகம் அதிகப்பட்சமாக ரிம50 அபராதமாக விதிக்கிறது. இந்த அபராதத்தை ரிம300-ஆக அதிகரிக்க பரிசீலனைச் செய்து வருவதாக இம்மன்ற உறுப்பினர் பேராசிரியர் மட்யா தியூன் லிங் தா தெரிவித்தார். இதன்வழி, பொதுமக்களிடையே, விழிப்புணர்வை மேலோங்க செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பினாங்கில் இதுவரை 53,000 பதிவுப்பெற்ற உடல் ஊனமுற்றோர் உள்ளனர். ஆனால், இவர்களுக்கு பெருநில பகுதியில் மொத்தம் 49 கார் நிறுத்தும் இடங்கள் மட்டுமே உள்ளன. எனவே, உடல் ஊனமுற்றோர்கள் இலகுவாக ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல நம்மால் இயன்ற உதவிகரம் நீட்டுவோம். மேலும், பினாங்கு மாநிலத்தில் பதிவுப் பெறாமல் இருக்கும் உடல் ஊனமுற்றோர்கள் அருகில் இருக்கும் சேவை மையங்களில் பதிவுச்செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);