மரம் நடும் திட்டம் இயற்கை வளத்தைப் பேண வித்திடும்

Admin

 

ஜார்ச்டவுன் மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா பேரவை , பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும் இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி இணை ஏற்பாட்டில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் திட்டம்இனிதே நடைபெற்றது . இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தனது வாழ்நாட்களில் ஒரு மரமாவது நட வேண்டும் எனும் விழிப்புணர்வை மேலோங்கச் செய்வதாகும்.

இத்திட்டம் இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த25 ஆசிரியர்களின் வழிக்காட்டலில் 280 மாணவர்கள் பங்கெடுத்து சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள் ரம்புத்தான், சீத்தாப்பழம், சிக்கு மற்றும் கொய்யா பழ மரங்களை இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் நட்டனர்.

பினாங்கு பயனீட்டாளர் சங்க கல்வி அதிகாரி சுப்பராவ் கூறுகையில் இத்திட்டம் அமல்படுத்துவதன் மூலம் மாணவர்கள் இயற்கை வளத்தைப் பேணு முடியும் என கற்றுக்கொள்வர்.

இத்திட்டத்தில் கலந்து கொண்ட அப்பள்ளி மாணவி ஷர்மித்தா இம்மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பார்த்துக் கொள்ள இணக்கம் கொண்டுள்ளதாகவும் கூடிய விரைவில் இம்மரங்களின் மூலம் பெறப்படும் காய்கணிகளைச் சுவைக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பினாங்கு மாநில கல்வி இலாகா அதிகாரி குமணன், இராமகிருஷ்ணா ஆசிரம துணை தலைவர் இராமசாமி, இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி புவனேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் வழி நடத்துவதன் மூலம் மாணவர்கள் மரம் நடுவது அனைவரின் பொறுப்பு என அறிந்து கொள்வர். மரங்கள் பிரணாவாயுவை வெளியிட்டுச் சுற்றுச்சூழலுக்குத் தூய்மையான காற்று வழங்குகிறது; பருவநிலை மாற்றத்தில் மேம்பாடுக் காண உதவுகிறது; மண்ணைப் பாதுகாக்கிறது மற்றும் வனவிலங்குகளை ஆதரிக்கிறது,” என மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலத்தின் துணைத் தலைவரான திரு தர்மன் தெரிவித்தார்.