மலிவு விலை வீடுகள் சட்டவிரோதமாக கொள்முதல் செய்யவில்லை – ஜெக்டிப்

ஆட்சிக்குழு உறுப்பினர் தாமான் லெம்பா இண்டா “ஏ” பிரிவு(ரிம42,000) மலிவு விலை வீடு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி கடிதம் வழங்கினார்

மாநில அரசு மலிவு விலை வீடுகளை சட்டவிரோதமாக பணக்காரர்களுக்குக் கொள்முதல் செய்வதாக சில தரப்பினர்கள் கூறும் அவதூறுகளை மறுத்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ .
வீடமைப்புத் தேர்வு செயல்முறை தர முன்னேற்ற மற்றும் தூய்மை குழு(SPEC) அமைக்கப்பட்டு தன் தலைவராக திரு ஜெக்டிப் திகழ்வதாகவும் தகுதியுடைவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என தெரிவித்தார்.
“தற்போது மலிவு விலை வீடுகள் பணக்காரர்களுக்கு மட்டுமே வழங்குவதாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இக்குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாது, எனவே இது குறித்து புகார் அல்லது தகவல் கொடுக்க விருப்பும் தரப்பினர் வீடமைப்பு அலுவலகத்தை நாடலாம்” என டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான திரு ஜெக்டிப் கூறினார்.
சிம்பாங் அம்பாட் பகுதியில் அமைந்துள்ள தாமான் லெம்பா இண்டா “ஏ” பிரிவு(ரிம42,000) மலிவு விலை வீடுகள் விண்ணப்பித்த 66 பேர்களுக்கு அனுமதி கடிதம் வழங்கினார் திரு ஜெக்டிப். இந்நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அஃபிப் பஹாருடின் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
SPEC’ எனும் வீடமைப்புத் தேர்வு செயல்முறையில் விதிக்கப்பட்ட தகுதி அடிப்படையில் தான் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதில் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளான மலேசிய குடிமகன், விண்ணப்பிக்கும் போது 21 வயதுக்கு மேல் இருத்தல் , பினாங்கில் பிறந்த அல்லது பினாங்கில் குடியிருத்தல், பினாங்கில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் மற்றும் வேலைசெய்தல் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவதாக செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் திரு ஜெக்டிப்.
2013-ஆம் ஆண்டு ‘SPEC’ எனும் வீடமைப்புத் தேர்வு செயல்முறை குழு அமைக்கப்பட்ட நாள் முதல் மலிவு விலை வீடு ‘ஏ’ பிரிவில் (ரிம42,000)16,363 விண்ணப்பதாரர்கள், ‘பி’ பிரிவில் (ரிம72,500) 6,234 விண்ணப்பதாரர்கள், ‘சி 1’ முதல் ‘சி4’ பிரிவு வரை 10,558 விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ‘சி’ பிரிவு மலிவு விலை வீடுகள் ரிம400,000 உட்பட்டிருக்கும்.
மாநில அரசு நேர்மையின் அடிப்படையில் தான் மலிவு விலை வீட்டு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் எனப் புலப்படுகிறது.