மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒன்றிணைந்து வாழ்வோம்- சத்தீஸ்

cof

பாகான் டாலாம் – “மதம், இனம் மற்றும் அரசியல் பின்னணியைப் பயன்படுத்தி சில தரப்பினர் பொது மக்களிடையே இனவாதத்தைத் தூண்டினாலும் நாம் மலேசியர்கள் என்ற உணர்வோடு இதனை எதிர்த்து ஒன்றிணைந்து வாழ்வோம்,” என பாகான் டாலாம் சட்டமன்ற சேவை மைய ஏற்பாட்டில் நடைபெற்ற சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி இவ்வாறு கூறினார்.

சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு பாகான் விழாவோடு (Butterworth Art Walk) மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. காலையில் ‘தாய் சீ’ எனும் சீன தற்காப்பு கலை பயிற்சியுடன் தொடங்கப்பட்டு கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்நாட்டு கலைஞர்களின் கலை நிகழ்ச்சி, சிங்க நடனம் மற்றும் பல வகையான உணவுகள் பரிமாறப்பட்டு நிறைவை நாடியது.

இந்தச் சீனப்புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைத்து சீன மக்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ். இந்தத் திறந்த இல்ல உபசரிப்புக்கு பல்லின மக்களும் கலந்து கொண்டதில் மனம் மகிழ்வதாக மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நிதி அமைச்சர் மேதகு லிம் குவான் எங்கின் பிரதிநிதியாக தான் கொங் சொங், செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் குமரன், சார்ட் இவன்திப் எண்டர்பிரைஸ் நிர்வாக இயக்குநர் சாய்னி பின் சாய்னுல் , தொழிலதிபர் டத்தோ செளந்தர்ராஜன் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.