மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அலுவலகத்தில் கைது செய்ததோடு மட்டுமின்றி ஒரு நாள் தடுப்புக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் என்ன என அரசு தலைமை வழக்கறிஞர் தான் ஶ்ரீ முகமது அப்பாண்டி அலியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதுவரை பங்களா வீட்டு கொள்முதல் சம்பந்தமான அனைத்து விசாரணையிலும் முதல்வர் முழு ஒத்துழைப்பு வழங்கிய வேளையிலும் அவரை தடுப்புக் காவலில் வைக்க வேண்டிய காரணம் என்ன என முதல்வர் தரப்பு வழக்கறிஞர் குழுவிற்கு தலைமையேற்துள்ள கோபிந் சிங் வினவினார். ஊழல் தடுப்பு ஆணையத்தின் செயலுக்கு லிம் குவான் எங்கின் வழக்கறிஞர் குழு கண்டனம் தெரிவித்தனர்.
தனது கட்சிக்காரர் மற்றும் மாநில அரசு தாமான் மங்கீஸ் நில விவகாரம் குறித்து “Kuala Lumpur International Dental Centre” மையத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியதையும் சுட்டிக்காட்டினார் பூஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு கோபிந் சிங்.
தொடர்ந்து காவல் துறை மற்றும் ஊழல் ஆணையம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்கிய வேளையில், முதல்வரை கைதுச் செய்வதற்கு ஆணித்தரமான காரணம் இல்லை என்றார்.
குற்றச்சாட்டப்பட்டவர் ஓடிச்செல்வதற்கு வாய்ப்பு இல்லாத வேளையில் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்வது சட்டத்தின் மரபு என சூளுரைத்தார்.
மாநில முதல்வர் மற்றும் நம்பிக்கை கூட்டணி அரசியல் தலைவர்களுடன் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.
ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் தலைமை வழக்கறிஞர் செயல்பாடு முதல்வரை அவமதிக்கும் வகையிலும் அவரது தூய்மையான நிர்வாகத்தில் கலங்கம் ஏற்டும் வண்ணம் இடம்பெற்றது.