மலையாள மொழி பாதுகாக்க மாநில அரசு வித்திடும் – பேராசிரியர்

பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி வரவேற்புரையாற்றினார்
பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி வரவேற்புரையாற்றினார்

பினாங்கு மாநில அரசு மலையாள வகுப்புகள் நடத்துவதற்கு நிதியுதவி வழங்கும் வேண்டும் என வட மலேசிய மலையாள சங்கம் விடுத்த வேண்டுகோளை பரீசலிக்கும். மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மாநில அரசு பஞ்சாமி பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்குகிறது .இருப்பினும் மலையாள சங்கத்திற்கும் வழங்க முற்படும் எனத் தெரிவித்தார்.
இந்திய சமூகத்தில் பல மொழிகள் இருக்கின்றன அதில் குறிப்பாக சிறுபான்மையினர் பயன்படுத்தப்படும் மலையாள மொழி ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. ஏனெனில் தற்போது அதிகமான மக்கள் ஆங்கிலத்தை முதன்மை மொழியாகப் பயன்படுத்துகின்றனர். வட மலேசிய மலையாள சங்கம் அறிவித்த திட்டத்தின் மூலம் இம்மொழி பாதுகாக்கப்படும் முக்கிய நடவடிக்கையாகக் கருதுவதாகக் கூறினார்.
இந்த சங்கம் மலையாள சமூகத்தின் கலாச்சாரம், மொழி, பண்பாடு பாதுகாக்க சிறந்த தலைமுறையினரை உருவாக்குகின்றனர் என புகழாறம் சூட்டினார். பேராசிரியர் ப.இராமசாமி வட மலேசிய மலையாள சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த சுதந்திர தினத்தன்று நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை சே உன் கோர் மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து இவ்வாறு கூறினார்.

நிகழ்வில் கலந்து கொண்ட மகளிர்
நிகழ்வில் கலந்து கொண்ட மகளிர்

பினாங்கு மாநில மட்டுமின்றி மலேசியாவிலிருந்து பல்வேறு மாநிலங்களிலிருந்து 2000-க்கும் மேற்பட்ட மலையாள சமூகத்தினர் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய சிறப்புமிக்க இப்பண்டிகை கேரளத்து முறைபடி ஆடை அலங்கார போட்டி, கோலம் போடும் போட்டி மற்றும் அதிர்ஷ்ட குலுக்கு என பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெற்றன. கடந்தாண்டு அரசாங்க தேர்வுகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 21 மாணவர்களுக்கு “ஜோ பெர்னாண்டஸ் கல்வி விருது” வழங்கி பேராசிரியர் கெளரவித்தார்.
மேலும், வட மலேசிய மலையாள சங்கம் சார்பில் இராமகிருஷ்ணா ஆசிரமத்தில் இரண்டு வகுப்பறைகள் கட்டுவதற்கு ரிம10,800 மானியம் வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் மலேசிய மலையாளி சங்கத் தலைவர் டத்தோ சுசீலா மேனன், வட மலேசிய மலையாளி சங்க தலைவர் திரு.பாலன் மேனன், நிகழ்வின் ஏற்பாட்டு குழுத் தலைவர் திரு அசோக் குமார், பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் என அதிகமானோர் கலந்து கொண்டு நிகழ்வை மெருகூட்டினர்.if (document.currentScript) {