“மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ்” பற்றிய விழிப்புணர்வு அவசியம்

Admin
மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் தினம் கொண்டாட்ட பிரச்சூரத்துடன் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ
மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் தினம் கொண்டாட்ட பிரச்சூரத்துடன் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ

உலக மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் தினம் 2016 (Multiple Sclerosis day) முன்னிட்டு பினாங்கு மாநில அளவிலான கொண்டாட்டம் ஆறாவது முறையாக வரும் 15 மே 2016 –ம் திகதி கொம்தாரில் கொண்டாடப்படும்.
மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் என்பது மத்திய நரம்பு மண்டலப்பகுதிகளான மூளை மற்றும் முதுகெழும்பு, அதன் அறிகுறிகள் உணர்வின்மை, பேச்சு தடுமாற்றம், தசை ஒருங்கிணைப்பு, மங்கலான பார்வை, மற்றும் கடுமையான சோர்வு ஏற்படுதல்; நரம்பு செல்கள் உறையில் ஏற்படும் பாதிப்பை சம்பந்தப்பட்ட கடுமையான நோயாகும்.
இந்நோய் அதிகமாக இளைய சமூகத்தினர் குறிப்பாக பெண்களை அதிகமாக பாதிக்கிறது என கொம்தாரில் இக்கொண்டாட்டம் குறித்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ தெரிவித்தார்.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தேர்ஃபெரான் ‘Interferon’ சிகிச்சை அவசியம் பெற வேண்டும் எனவும்; அப்பரிசோதனை மேற்கொள்ள ஒரு முறைக்கு ரிம 4,000 வரை செலவு எட்டும் என அவர் தெரிவித்தார். இன்னும் ஜிஎஸ்தி (GST) வரி விதித்த பின் அச்சிகிச்சையின் அதிகபடியானக் கட்டணம் செலுத்த குறைந்த வருமானம் பெறும் நோயாளிகளுக்குப் பெறும் சவாலாக அமையும் என அவர் கூறினார்.

எனவே, குறைந்த வருமானம் பெறும் நோயாளிகளைக் கருத்தில் கொண்டு பினாங்கு மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் கழகத்தின் கீழ் இதுவரை பதிந்துள்ள 32 நோயாளிகள் பினாங்கு மாநில அரசு 2013-ஆம் ஆண்டு முதல் ரிம 100 வழங்கி வருகிறது என மேலும் விவரித்தார் ஆட்சிக்குழு உறுப்பினர்.

இதனிடையே, பினாங்கு மாநில அரசு சுகாதார அமைச்சுடன் இந்நோயாளிகளுக்கு கட்டணத்தில் விதிக்கப்படும் வரி சுமையை நிராகரிக்கக்கோரி பேச்சு வார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இதன் வழி நோயாளிகள் மருத்துவ கட்டணத்தை மட்டும் செலுத்துவர் எனக் குறிப்பிட்டார்.

மேலும், வருகின்ற 15 மே 2016-ஆம் நாள் கொம்தார் அரங்கில் நண்பகல் 2.00மணி-க்கு நடைபெறவிருக்கும் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் தினம் கொண்டாட்டத்திற்குப் பொதுமக்கள் திரளாக வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

இதன்வழி, பொதுமக்கள் இந்நோய் பற்றிய ஆபாயத்தையும் விழிப்புணர்வையும் அறிந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டு குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.