பினாங்கு மாநில அரசு வழங்கும் மாணவர்களுக்கான உயர்க்கல்வி ஊக்கத்தொகை பெற்றோர்களுக்குப் பொருளாதார சுமையைக் குறைப்பதோடு மட்டுமின்றி மாணவர்களின் செலவினங்களுக்கும் உதவியாக அமைவதாக முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார். இதனை வடகிழக்கு மாவட்டத்தில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் முதல்வர் தெரிவித்தார். மலேசியாவில் அமைந்துள்ள உயர்க்கல்வி நிலையங்களில் பயிலும் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற மாணவர்கள், எதிர்காலத்தில் பினாங்கு மாநிலத்திற்கு மீண்டும் வருகையளித்து பணிப்புரிய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
“உயர்க்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் பினாங்கு மாநிலத்திற்கு மீண்டும் வருகைபுரிந்து சேவையாற்றுவதோடு மாநிலத்தின் “மாணவர்கள் வளமான, பசுமையான, பாதுகாப்பான மற்றும் முன்னேற்றமிக்க மாநிலத்தை உருவாக்க பினாங்கில் சேவையாற்ற வேண்டும்” – முதல்வர் வளர்ச்சிக்கும் ஊன்றுகோளாகத் திகழ்வர் என நம்பிக்கை தெரிவித்தார். “மேலும், மாணவர்கள் பினாங்கு மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் வருங்கால மனித மூலதனம்” என குறிப்பிட்டார். ஒன்பதாவது ஆண்டாக வழங்கப்படும் இந்த ஊக்கத்தொகை மலேசியாவில் அமைந்துள்ள அனைத்து அரசு உயர்க்கல்வி மையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 தனியார் உயர்க்கல்வி மையங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்றார் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. “வளமான, பசுமையான, பாதுகாப்பான மற்றும் முன்னேற்றமிக்க மாநிலத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்” என ஊக்கத்தொகை பெற்றுக்கொண்ட 575 மாணவர்களிடம் கூறினார்.
துணை முதல்வர் , டத்தோ முகமது ரஷிட் அஸ்னோன் மற்றும் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி உரையாற்றினர். ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினரும் மாநில முதல்வரின் அரசியல் செயலாளருமான வோங் ஒன் வாய், கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் எங், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயபாலன், நடப்பு வடகிழக்கு மாவட்டத் தலைவர் நூரம்சினாஸ் சம்சுடின் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் ஊக்கத்தொகை பெற்றுக்கொண்ட மாணவர்களில் தீபகற்ப மலேசியாவில் கல்வி பயிலும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்ற மாணவர்களுக்கு ரிம1,000 அதேவேளையில் சபா, சரவாக் மாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்கு ரிம1,200 ஊக்கத்தொகை வழங்கப்பட்டன.