பினாங்கு இந்து சங்க ஆயர் ஈத்தாம் கிளையின் ஏற்பாட்டில் 14-வது முறையாக திருமுறை ஓதும் போட்டி கடந்த 23/7/2016-ஆம் நாள் இனிதே நடைபெற்றது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தப் போட்டியின் முக்கிய நோக்கம் சிறு குழந்தை முதல் பள்ளி மாணவர்கள் வரை திருமுறை ஓதுவதை ஊக்கப்படுத்துவதே ஆகும். ‘திருமுறை’ சைவர்கள் போற்றும் தமிழ் வேத நூலாகும். சமூகநல அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வினை புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால் மற்றும் ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தனர்.
சமயம் சார்ந்த போட்டி மற்றும் நிகழ்வுகளுக்கு மாநில அரசாங்கம் என்றும் ஆதரவு வழங்கும் எனக் கூறினார் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய். இதன் மூலம் மாணவர்கள் சமயநெறி மற்றும் ஒழுக்கத்துடன் வாழ துணைபுரியும் என்றார். அதோடு இந்நிகழ்விற்கு ரிம4000 நிதியுதவி வழங்கினார் என்றால் மிகையாகாது.
மாணவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால் தமது வரவேற்புரையில் கூறினார். மாநில அரசாங்கமும் மாணவர்கள் கல்வித்துறையில் வெற்றிநடைப்போடும் பொருட்டு பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். தங்க மாணவர் திட்டம், பினாங்கு எதிர்கால உபகாரச் சம்பளம் என பல திட்டங்கள் மேற்கொண்டு மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிகாட்டுகிறது.
திருமுறை ஓதும் போட்டியில் 110 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் வெற்றிப்பெற்ற மாணவர்கள் மாநில ரீதியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வர். இந்நிகழ்வில் இந்திய மாணவர்கள் கல்வித்துறையில் குறிப்பாக யூ.பி.எஸ்.ஆர், பிதி3 மற்றும் எஸ்.பி.எம் அரசு தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய் ஆகிய இருவரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் நற்சான்றிதழ் வழங்கினர். தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு தமது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);