பொதுவாகவே பினாங்கு மாநிலத்தில் நடைபெறும் தைப்பூச விழாக் கொண்டாட்டத்தினால் சாலை நெரிசல் ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர்மலை ஶ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானைத் தரிசிக்க ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள், பக்தர்கள் பினாங்கிற்கு வருகைபுரிவர்.
எனவே, சாலை நெரிசலை சமாளிக்க பினாங்கு மாநகர் கழகம் பல அரிய நடவடிக்கைகளை மேற்கொள்வர். முத்துச்செய்தி நாளிதழ் செய்தியாளர்களை மாநகர் கழக செயலாளர் இயூ துங் செங் கொம்தார் நான்காவது மாடியில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமரா அறைக்குக் கொண்டு சென்றார்.
“நாங்கள் சாலை நெரிசல் ஏற்படும் 11 முக்கிய இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். இரத ஊர்வலம் அன்று சாலை நெரிசல் ஜோர்ச்டவுன் பகுதியில் ஏற்படும் அதேவேளையில் தைப்பூசத் தினத்தன்று யூத் பார்க் மற்றும் பொட்டானிக்கல் கார்டன் பகுதியில் நிகழும். சாலை நெரிசல் சமாளிப்பதில் மாநகர் கழகம் மிகுந்த அனுபவம் கொண்டுள்ளது எனவும், நகர்ப்புற சேவை மற்றும் அமலாக்க ஊழியர்கள் சீனப்பெருநாள் கொண்டாட்டம் தொடங்கி பணியாற்றி வருகின்றனர்” என இயூ கூறினார்.
“பெருநாள் மற்றும் விழாக்காலங்களில் நிகழும் சாலை நெரிலை மேற்கொள்ள மாநகர் கழகம் எப்பொழும் தயார் நிலையில் இருப்போம். மாநகர் கழகம் தீவுப்பகுதியில் ஏற்படும் சாலை நெரிசலை சமாளிக்க காவல் துறை மற்றும் தான்னார்வ ரோந்து படை உதவியை நாடும். மேலும் மாநகர் கழக ஊழியர்களும் சம்மந்தப்பட்ட இடத்தில் களம் இறக்கி பணிப்புரிவர். மேலும் மாநகர் கழகம் கண்காணிப்பு கேமரா மற்றும் தகவல்தொடர்பு அலைவரிசைகளைப் பயன்படுத்தி சாலை போக்குவரத்து சுமூகமாக இடம்பெறும். ” என மேலும் தெரிவித்தார்.
“மாநகர் கழகம் மாநில மேம்பாட்டுக்கு முன்னோக்கிச் செல்லும். தகவல் தொழில்நுட்ப சகாப்தத்தில் நகரத்தை திறன்பட வழி நடத்த முடியும்” என்றார் இயூ.