மாநில அரசு ஊழியர்களுக்கு இலவசப் பேருந்துச் சேவை

கடந்த டிசம்பர் 3-ஆம் திகதி தொடங்கப்பட்ட ‘BEST’ என்னும் இலவசப் பேருந்துச் சேவை அக்கரையில் வசிக்கும் பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு நன்மை பயத்துள்ளது. இது கொன்சொர்தியும் பேருந்து நிறுவனமும் பினாங்கு மாநில அரசும் இணைந்து வழங்கும் கூட்டுத் திட்டமாகும். அரசு ஊழியர்கள் பொது போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் அதே வேளையில் பினாங்கில் குறிப்பாகப் பினாங்குப் பாலத்தில் பெருகி வரும் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த ‘பெஸ்ட்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கூறினார்.

இத்திட்டத்தில் பங்கு பெற விண்ணபித்தவர்களில் 82 அரசு ஊழியர்கள் மட்டுமே தேர்வு பெற்றுள்ளனர். பெண்களுக்கும் குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களுக்கும் இத்திட்டத்தின் வழி பயன்பெற முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. முதல் மூன்று மாதச் சோதனைக் காலத்திற்கு இச்சேவை வழங்கப்படும். அதன் ஆதரவைத் தொடர்ந்து பேருந்துகள் அதிகரிக்கப்படும் என்று போக்குவரத்துப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் திரு சௌ கொன் யௌ தெரிவித்தார். இந்த மூன்று பேருந்து சேவைக்காக மக்கள் கூட்டணி அரசு ரிம50,000 ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்திற்காகச் செயற்படும் இரண்டு பிலஸ் லைனர் பேருந்துகள் காலை 6.50க்குச் செபெராங் ஜயாவில் உள்ள சன்வே கரினிவெல் பேரங்காடியிலிருந்து புறப்பட்டு கொம்தார் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடையும். மீண்டும் மாலை 5.20க்கு கொம்தாரிலிருந்து புறப்படும். இப்பேருந்து சேவை அரசு ஊழியர்களின் போக்குவரத்துச் செலவினைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

706290_556945067656281_807404909_o

பேருந்திலிருந்து இறங்கும் அரசு ஊழியர்களை, ஆட்சிக்குழு உறுப்பினர் திரு சௌ கொன் யௌ, மாநில அரசுச் செயலாளர் டத்தோ ஃப்ரிசான் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், டத்தோ அப்துல் மாலிக் (இடமிருந்து வலம்) ஆகியோர் வரவேற்கின்றனர்.