மாநில அரசு தாய்மார்களின் தியாகத்தை அங்கீகரிக்கின்றது – பேராசிரியர்

தங்க தாய்மார் திட்டத்தில் பயன் பெற்ற மாதுடன் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி.

 

2018-ம் ஆண்டுக்கான ஒன்பதாவது முறையாக இத்திட்டம் பினாங்கு வாழ் குடும்ப மாதுகளுக்கு ஒரே நாளில் ஆங்காங்கே வழங்கப்பட்டது. இத்திட்டம் பிறை சட்டமன்ற உறுப்பினரும் பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் தலைமையில் தாமான் இண்ராவாசே மலாயா வங்கியில் நடைபெற்றது. இவ்வாண்டு பிறை தொகுதிக்கு மட்டும் ரிம 87,400 ஒதுக்கப்பட்டு அனைத்து இன மக்களுக்கும் வழங்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டு தவணைக்காக சுமார் 874 தாய்மார்கள் தத்தம் ரிம100.00 பெற்று கொண்டனர். இந்த நிதியுதவி வழங்கும் திட்டம் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டது.

தனது திறமையான நிர்வாகத்தினால் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் வருமானம் பெறும் பினாங்கு மாநில அரசு தொடர்ற்தார்போல் இவ்வாண்டும் தங்க திட்டங்களுக்காக ரிம 100 வழங்கியது. இத்திட்டத்தின் கீழ் அதிகமான பினாங்கு வாழ் மக்கள் பயன்பெற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த குடும்பத்தை உருவாக்க குடும்ப மாது வழங்கும் சேவையை அங்கீகரிக்கும் பொருட்டு இந்த தங்க தாய்மார் சன்மானம் வழங்கப்படுவதாக தாமான் இண்ராவாசே மலயன் வங்கியில் வழங்கப்பட்ட தங்க திட்ட அமலாக்கத்தை காண நேரில் சென்று போது இவ்வாறு குறிப்பிட்டார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.

மாநில அரசு இலஞ்ச ஊழல் அன்றி திறமை, ஆற்றல் மற்றும் வெளிப்படை எனும் கோட்பாட்டில் திறன்பட நிர்வகிப்பதால் இது சாத்தியமாகிறது என மேலும் விவரித்தார். பினாங்கு மாநில அரசு மக்களின் நலனில் எப்பொழுதும் கவனம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் செபராங் ஜெயா நகராண்மை கழக உறுப்பினர்களான டேவிட் மார்ஷல் மற்றும் ஜெசன் ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.