மாநில அரசு ‘பினாங்கில் கோவிட் 19-யை எதிர்ப்போம்’ எனும் பிரச்சாரத்தை தொடங்கியது.

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு பொது மக்களுக்கு கோவிட்-19 எனும் நுண்ணூயிர்க்கிருவி மற்றும்  விரைவில் தொற்றக்கூடிய நோய் குறித்த தகவல் விரைவாகவும் திறன்பட பெறுவதற்கு ‘பினாங்கில்  கோவிட்-19யை எதிர்ப்போம்’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியது.


செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் மாநில அரசு பொது மக்களுடன் ஒன்றிணைந்து இந்நோய் பராவாமல் பாதுகாக்க உறுதிப் பூண்டுள்ளது எனக் கூறினார்.

 இந்த ‘பினாங்கில்  கோவிட் 19-யை எதிர்ப்போம்’ பிரச்சாரத்தின் மூலம் பொது மக்களுக்குத் தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் பரவுவதைத் தடுக்க முடியும், அதுமட்டுமின்றி அவர்களிடையே நிலவும் பதட்ட நிலையைத் தடுக்க முடியும் என்றார்.

“இந்த பிரச்சாரம் மலேசிய சுகாதார அமைச்சு மற்றும் மாநில சுகாதாரத் துறை வெளியிடும் தகவல்கள், வழிக்காட்டி மற்றும் அறிவுறுத்தல்கள் பகிரப்படும்.

“இந்தப் பிரச்சாரம் பொது மக்களை ஒன்றிணைத்து இத்தொற்று நோய் பரவாமல் தடுக்கும் தளமாகத் திகழ்கிறது. தற்போது தங்கள் உயிரை அர்ப்பணித்து இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்கி வருவதோடு இந்நோய் மலேசியர்களிடையே பரவாமல் தடுக்கும் சுகாதார அமைச்சு ஊழியர்கள் மற்றும் மாநில சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு மாநில முதல்வர் நன்றிக் கூறினார்.

இக்கூட்டத்தில் சுற்றுலா, கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய ஆட்சிக்குழு உறுப்பினர் இயோ சூன் இன் கலந்து கொண்டார்.

கோவிட் -19 பற்றிய தகவல்கள் அறிந்து கொள்ள https://www.facebook.com/ilovpg எனும்
அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தை வலம் வரலாம்.

பினாங்கு மாநிலத்தின் கோவிட்-19 குறித்த புள்ளிவிவரங்கள் வினவிய போது, முதல்வர் தனது பதிலில் இந்நோய் குறித்த முதன்மை தரவு சுகாதார அமைச்சு வெளியிடும் என்றும் மாநில அரசிடம் எவ்வித தரவும் இல்லை என தெளிவுப்படுத்தினார்.

“மாநில வாரியாக இந்நோய் குறித்த விரிவான தகவல்களை வழங்கிய சுகாதார அமைச்சின் செயல், தற்போது மாநில ரீதியில் ஊராட்சி மன்றங்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் முகவர் நிறுவனங்கள் கைகோர்த்து ஒத்துழைப்பு நல்கி இச்சூழ்நிலையைக் கையாள உதவுகிறது,” எப நில விவகாரங்கள், நில மேம்பாடு, போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் விளக்கமளித்தார்.

இந்த பிரச்சாரத்தின் மூலம், பினாங்கு மக்களின் பாதுகாப்பிற்காக பல உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன:

*சுகாதார அமைச்சின் பொது வழிகாட்டுதலுக்கு இணங்க அனைத்து மாநில அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட வேண்டும்.

*அனைத்து அரசு நிறுவனங்களும், தனியார் வளாகங்களும், கல்வி நிறுவனங்களும் (அரசு மற்றும் தனியார்) பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு இணங்க வேண்டும்.

i. அரசு நிறுவன வளாகங்கள், தனியார் வளாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் (அரசு மற்றும் தனியார்) ஆகியவற்றின் அனைத்து நுழைவாயிலைப் பயன்படுத்தும் பொது மக்களின் உடல் வெப்பநிலை சோதிக்கப்படுதல்

ii. கை கழுவும் திரவகத்தை தயார்நிலையில் வைத்தல்
iii. சமூகத்துடன் கலந்து கொள்வதை தவிர்த்தல்

iv. கோவிட்-19 நோய்க்கான அறிகுறிகளைக் கொண்ட பொது மற்றும் தனியார் ஊழியர்கள் விடுமுறை எடுத்தல்.

*பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ஆகிய இரு ஊராட்சி மன்றங்களும் வியாபார கடைகள் குறிப்பாக உணவகங்களில் மேல் குறிப்பிட்ட சுகாதார வழிகாட்டிகளைப் பின்பற்றுவதை உறுதிச்செய்யும்.

*சுய மற்றும் குடும்ப பாதுகாப்பு பற்றிய பொது சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம் மாநில முழுவதும் நடத்தப்படும்.

*முக கவசம் தயாரிப்புகள், கை கழுவும் திரவம் மற்றும் வெப்பமானிகள் பொருட்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, மலேசிய சமூக மருந்தியல் சங்கத்தை (MCPG) mcpg.org.my தொடர்புக் கொள்ளவும்.

*பொது மக்கள் சுகாதார துறையின் கீழ் இயங்கும் ‘Crisis Preparedness & Response Centre (CPRC), JKNPP’ எனும் மையத்த மின்னஞ்சல் முகவரி: [email protected] அல்லது 04-262 9902 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.