கடந்த அக்டோபர் 13-ஆம் திகதி அன்று பெய்த கனத்த மழையில் பினாங்கு மாநில தென்மேற்கு பகுதி முழுவதும் வெள்ளம் ஏற்பட்டது. இம்மழை பின்னிரவு மணி 2.00க்கு தொடங்கி சுமார் 12 மணி நேரம் தொடர்ந்து பெய்தது. இதனால், 850 வீடுகள் பாதிப்புக்கப்பட்டுள்ளது. நீரின் அளவு 0.5 முதல் 1 மீட்டர் வரை உயர்ந்ததில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு சில வீடுகளில் மின்சார பொருட்கள், தளவாடங்கள் மற்றும் பல பொருட்கள் சேதமடைந்தன என பினாங்கு மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமட் ரஷிட் ஹஸ்னோன் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
பினாங்கு மாநில சட்டமன்ற வாரியாகப் பாதிக்கப்பட்ட வீடுகள் எண்ணிக்கை பின்வருமாறு:
சட்டமன்றம் | பகுதி | வீடுகளின் எண்ணிக்கை |
பாயான் லெபாஸ் | கம்போங் பிங்ஜாய் | 15 |
கன்போங் செரோனோக் | 10 | |
ஜாலான் கொலாம் ஈகான் | 12 | |
பின்தாசான் கெனாரி சுங்கை ஆரா | 3 | |
கம்போங் பாயான் லெபாஸ் | 10 | |
புக்கிட் புர்மா | 5 | |
கம்போங் பாயா | 40 | |
கம்போங் எம்பாட் பெலாஸ் | 14 | |
கம்போங் மஸ்ஜிட் | 30 | |
தாமான் பெர்டா | 168 | |
கம்போங் நெலாயான் | 30 | |
கம்போங் சூலுப் | 80 | |
கம்போங் மாதாஹரி நாய்க் | 30 | |
சுங்கை பத்து லாவுட் | 5 | |
கிலாஸ்தர் வீடுகள் தெலோக் குன்பார் | 40 | |
பாகான் தெலோக் குன்பார் | 60 | |
தாமான் சஹாபாட் | 25 | |
பத்து மாவுங் | சுங்கை தீராம் | 7 |
பெர்மாதாங் டாமார் லாவுட் | 1 | |
கம்போங் புக்கிட் கெச்சீல் | 20 | |
தெலோக் பாஹாங் | தாமான் நேலாயான் | 2 |
புலாவ் பெதோங் | சிம்பாங் எம்பாட் | 30 |
சுங்கை பூரோங் | 30 | |
புலாவ் பெதோங் | 40 | |
கம்போங் தெராங் | 70 | |
ஜாலான் பாரு | 4 | |
குவாலா ஜாலான் பாரு | 14 | |
மொத்தம் |
850 |
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 9 குடும்பங்கள் (33 பேர்) ஆயிர் தெலோக் கும்பார் பொது மண்டபத்திற்கு இடம் பெயர்ந்தனர். இவர்களுக்குத் தங்கும் வசதி, உணவு பொருட்கள் மற்றும் இதர அத்தியவசிய பொருட்களும் வழங்கப்பட்டன. மேலும், 20 குடும்பங்கள் புலாவ் பெதோங் மசூதிக்கு மாற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில சமூக நல துறையின் கீழ் அத்தியவசமான தேவைகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமட் ரஷிட் ஹஸ்னோன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டது. அதோடு, புலாவ் பெதோங்கில் ஒரு மூதாட்டிக்கு பாம்பு கொத்தப்பட்டதோடு, சுங்கை பினாங்கில் வீட்டு கூரையின் மேல் மரம் சாய்ந்ததில் ரிம 5000 இழப்பீடு ஏற்பட்டது. மேலும், புக்கிட் பெர்மாதாங் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இருப்பினும், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என மேலும் கூறினார் முதலாம் துணை முதல்வர்.