பினாங்கு மாநில விரைவாக வெள்ள நிவாரண திட்டங்கள் செயல்படுத்த ரிம665,00 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது என உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்நிதியைப் பயன்படுத்தி நீர்ப்பாசன மற்றும் வடிகாலமைப்பு துறை உடனடியாக 7 திட்டங்கள் செயல்படுத்த முடிவுச்செய்துள்ளது.
*சுங்கை பினாங்கு ஆறு ஆழப்படுத்துதல் – ரிம180,000
* சுங்கை பினாங்கு ஆறு விரிவுப்படுத்துதல் – ரிம200,000
*வட கிழக்கு மாவட்ட குளத்தை மேம்படுத்துதல் -ரிம50,000
* சுங்கை டொன்டாங் நதிக்கரையை ஆழப்படுத்துதல் மற்றும் பழுதுப்பார்த்தல்- ரிம75,000
* வட கிழக்கு மாவட்ட நீர் குழாய்களைப் பழுதுப்பார்த்தல்- ரிம30,000
* ஆயர் ஈத்தாம் நதிக்கரையை ஆழப்படுத்துதல் மற்றும் பழுதுப்பார்த்தல் ரிம100,000
* ஜெலுந்தோங் ஆறு ஆழப்படுத்துதல் – ரிம30,000
நீர்ப்பாசன மற்றும் வடிகாலமைப்பு துறை இயக்குநர் கூடிய விரைவில் தாமான் லும்பா குடா பகுதி வெள்ள நிவாரணத் திட்ட பரிந்துரைகளை சமர்ப்பிப்பார் என சாவ் அறிவித்தார். தற்போது தாமான் லும்பா குடாவில் நிவாரணப்பணி மேற்கொள்ளவில்லை என்றும், சுங்கை பினாங்கு 3-வது பிரிவு வெள்ள நிவாரணத் திட்டம் மேற்கொள்வதன் மூலம் ஆயர் ஈத்தாம் ஆற்று நீர் சுங்கை பினாங்கிற்கு இலகுவாகச் சென்றடையும். இதன் மூலம் வெள்ளத்தை அப்பகுதியில் தவிர்க்கலாம் என்றார்.
கூட்டரசு அரசாங்கம் வெள்ள நிவாரண மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்ள நிதி வழங்க தாமதிப்பதாகக் கூறினார். இதனால் வெள்ள நிவாரண திட்டம் முடங்கி கிடக்கிறது. பினாங்கில் நிகழும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வுக்காண கூட்டரசு அரசாங்கம் உடனடியாக நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தற்போது பினாங்கில் நிகழும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வுக்காண மாநில அரசின் நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என தெளிவுப்படுத்தினார்.