பினாங்கு வாழ் மக்களின் ஒற்றுமைக்கு ஊன்றுக்கோளாக விளங்கும் மக்கள் கூட்டணி அரசு சார்பில் மாநில அளவிலானத் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வு நவம்பர் 6-ஆம் திகதி சுங்கை பாக்காப் பொது மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. மக்கள் கூட்டணி அரசு சார்பில் நடைபெறும் 6-வது தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு என்றால் மிககயாகாது.
இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் அலை மோதியது. அதோடு மூவின மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தினர். இந்தியர்களின் பாரம்பரிய உணவுகளான தோசை, இட்லி, முறுக்கு, இடியாப்பம், பலகார வகைகள் ஆகியவை வழங்கப்பட்டன. சுற்றுச்சூழலின் பாதுகாப்புக்கு அடித்தலமாக விளங்கும் பினாங்கு மாநில அரசு பொது மக்களிடம் சொந்த கொள்கலன் எடுத்த வர பரிந்துரைக்கப்பட்டது. சொந்த உணவு கொள்கலன் கொண்டு வந்த பொது மக்களுக்குக் கரண்டிகள் பினாங்கு பசுமை கழகத்தின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப. இராமசாமி அவர்கள் மக்கள் கூட்டணி அரசு பினாங்கு வாழ் இந்திய மக்களின் அனைத்து தேவைகளுக்கும் செவி சாய்ப்பதோடு மட்டுமின்றி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்றனர் என்றால் மிகையாகாது. தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு மானியம் வழங்குவதுடன் தமிழ்ப் பாலர்ப்பள்ளிகளுக்கும் மானியம் வழங்குவது பாராட்டக்குறியதாகும் என்றார் இரண்டாம் துணை முதல்வர்.
மாநில முதல்வரின் பிரதிநிதியாக வருகை புரிந்த முதலாம் துணை முதல்வர் மாண்புமிகு டத்தோ ஹஜி முகமது ரஷிட் பின் ஹஸ்னோன் அவர்கள் மாநில அரசு சார்பில் அனைத்து இந்து மக்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்குச் சிரப்பு விருந்தினராக மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ டாக்டர் அப்துல் ரஹ்மான் ஹஜி அபாசின் அவர்கள் தமது துணைவியாருடன் வருகையளித்தார். மேலும் மாநில சபாநாயகர் லாவ் சூ கியாங், பத்து மாவுங் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குறிய அப்துல் மாலிக் அப்துல் காசிம், மன்சூர், டத்தோ புலவேந்திரன்.
டத்தோ அருணாசலம், மாநில செயலாளர் டத்தோ பாரிசான் பின் டாருஸ் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாகக் கலந்து கொண்டனர்.