மாநில சுகாதாரத் துறை கோவிட்-19 வழக்குகள் கண்காணிக்க வலியுறுத்து – முதல்வர்

Admin

பத்து உபான் – மலேசிய சுகாதார அமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பைத் தொடர்ந்து, மாநிலத்தில் கோவிட்-19 வழக்குகளை கண்காணிக்குமாறு மாநில அரசாங்கம் மாநில சுகாதாரத் துறைக்கு வலியுறுத்தியுள்ளது.

நமது நாட்டில் இனிமேல் கட்டிட உள்புறங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.

ஆயினும் பேருந்து, இரயில், விமானம், வாடகைக் கார்கள், இ-ஹெய்லிங் வாகனங்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போதும் மருத்துவமனைகளிலும் தொடர்ந்து கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.

“சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும், குறிப்பாக மாநில சுகாதாரத் துறை கோவிட்-19 குறித்த தற்போதைய நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்று முதல்வர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

“இந்த தளர்வு மாநிலத்தில் கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கையை எவ்வாறு பாதிக்கும்?” என மிண்டன் ஹைட்ஸில் ஒரு பத்திரிகையாளர் கேட்டக் கேள்விக்கு சாவ் இவ்வாறு பதிலளித்தார்.

புதிய இயல்பிற்கு மக்கள் பழகிக் கொள்ள வேண்டும், என்றார்.

நாட்டில் COVID-19 நிலைமை மேம்பட்டுவருவதை அடுத்து அறிவியல் தரவுகளின் அடிப்படையில் கட்டட உட்புறங்களில் இனிமேல் கட்டாயமாக முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்தார்.

“எனவே, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையில்(எஸ்.ஓ.பி) வழங்கப்பட்ட தளர்வு, எண்டமிக் கட்டத்தை நோக்கி பயணிப்பதை உறுதிச் செய்கிறது.

“கட்டட உட்புறங்களில் முகக்கவசங்களைப் பயன்படுத்துவது கட்டாயம் இல்லை என்றாலும், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் SOP தளர்வைப் பின்பற்றாமல் முகக்கவசங்களைத் தொடர்ந்து அணிய ஊக்குவிக்கிறோம்.