மாநில முதல்வர் தொடர்ந்து பணியாற்ற நம்பிக்கை கூட்டணி ஆதரவு

Admin
மாநில நம்பிக்கை கூட்டணி அரசியல் தலைவர்கள் ஒருமித்த மனதுடன் மாநில முதல்வருக்கு தனது ஆதரவை தெரிவிக்கின்றனர்
மாநில நம்பிக்கை கூட்டணி அரசியல் தலைவர்கள் ஒருமித்த மனதுடன் மாநில முதல்வருக்கு தனது ஆதரவை தெரிவிக்கின்றனர்

பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி அரசு ஒருமித்த மனதுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் பதவி விலக அவசியவில்லை என அறிவித்தது. சட்டத்துறை சார்ந்த எந்த துறையிலும் மாநில முதல்வர் பதவி வகிக்கவில்லை, எனவே குவான் எங் தொடந்து பணியாற்றலாம் என கொம்தார் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார் மாநில நீதி கட்சி தலைவர் டத்தோ மன்சோர் ஒத்மான்.

இது முதல்வரின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து நம்பிக்கை கூட்டணி ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை பிலவுப்பட செய்யும் முயற்சியாகும் என மேலும் தெரிவித்தார்.

மாநில நம்பிக்கை கட்சி தலைவர் டத்தோ டாக்டர் முஜாஹிட் “முதல்வர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அரசியல் அணுகுமுறை, எனவே முதல்வர் தொடர்ந்து பதவி வகிக்க வேண்டும் ” என்றார்.

இந்நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினரும் மாநில ஐக்கிய ஜனநாயக கட்சி தலைவருமான சாவ் கொன் யாவ் மற்றும் நம்பிக்கை கூட்டணி உறுப்பினர்களும் கல்ந்து கொண்டனர்.
இன்றைய நம்பிக்கை கூட்டணி கூட்டத்தில் மாநில முதல்வர் தொடர்ந்து மக்களுக்கு சேவை வழங்குமாறு கேட்டுக்கொண்டு நீதிமன்ற குற்றச்சாட்டுகளில் இருந்து விரைவில் விடுப்பட்டு வெற்றிப்பெற வேண்டும் என முடிவுச்செய்யப்பட்டது.