செபராங் பிறை – பினாங்கு மாநில அரசு இனம், மதம் பேதமின்றி பினாங்குவாழ் மாணவர்களுக்குத் தொடர்ந்து 12-வது முறையாக உயர்க்கல்வி ஊக்கத்தொகை வழங்கியது. மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி பினாங்கு2030 கொள்கையை நனவாக்க அனைத்து தரப்பினரின் பங்களிப்பு, திட்டமிடல் மற்றும் ஈடுப்பாடு அவசியமாகிறது என்றார். நிலையான மேம்பாடு, ஆக்கப்பூர்வமான திட்டங்களுடன் மாநில அரசு பினாங்கு மாநிலத்தை முன்னெடுத்து செல்லும் என அவர் சூளுரைத்தார்.
மாநில கல்வித் துறையை வலுப்படுத்தவும் சமூக பங்களிப்பை மேம்படுத்துவதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கல்வி, சீவிக் மற்றும் வாழ்நாள் கல்வி முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை. இதனால் மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மாநில அரசு முடிவுகளை எடுக்க முடியும். முறையான கல்வி, குடிமை அல்லது வாழ்நாள் கல்வி என கல்வி மக்களை மேம்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
2019- ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தில் பயிலும் 610 மாணவர்கள் ஊக்கத்தொகை பெற தகுதிப்பெற்றுள்ளனர். இதற்காக மாநில அரசு ரிம 406,080.00 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது என செபராங் பிறை அரேனாவில் நடைபெற்ற ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வில் பொருளாதார திட்டமிடல், மனித மூலதன வளர்ச்சி, கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் & புத்தாக்க ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் ப.இராமசாமி தமதுரையில் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், அவர் கூறுகையில், பெருநிலத்தில் மட்டும் மாவட்ட வாரியாக தத்தம் வட செபராங் பிறை (157), மத்திய செபராங் பிறை (157) மற்றும் தென் செபராங் பிறை (117) என் முதலாம் மற்றும் நான்காம் படிவம் பயிலும் தகுதிப்பெற்ற மாணவர்கள் ஊக்கத்தொகை பெற்று பயனடைந்தனர்.
அதிகரித்து வரும் வாழ்க்கை சுமையினால் அவுதியூறும் பெற்றோர்களின் பணச்சுமையை குறைக்கும் நோக்கத்தில் மாநில அரசு இந்த ஊக்கத்தொகையை வழங்குகின்றது என்பது சாலச்சிறந்தது.
மாநில அரசு இரு முறை ஊக்கத்தொகையை அதிகரித்துள்ளது. கடந்த 2009 -ஆம் ஆண்டு ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி பயிலும் மாணவர்கள் ஊக்கத்தொகையை 100%-க்கு அதிகரித்து ஆரம்பப்பள்ளி மாணவர்கள் ரிம240-லிருந்து ரிம480-ஆக அதிகரிப்பு; இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரிம360 இருந்து ரிம720-ஆக அதிகரிப்பு. அதேவேளையில் 2013-ஆம் ஆண்டு ரிம 120 அதிகரிக்கப்பட்டு தற்போது ஆரம்பப்பள்ளி மாணவர்கள் ரிம600-ம் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் (ரிம840)பெறுகின்றனர் குறிப்பிடத்தக்கதாகும்
. பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இந்த ஊக்கதொகையை பெற தகுதிப்பெற்றுள்ளது. 2008-ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை மாநில அரசின் ரிம19.98 கோடி நிதி ஒதுக்கீட்டில் சுமார் 30,881 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
“பினாங்கு தொடர்ந்து வளர்ச்சியைத் தழுவ, தொழில்துறை புரட்சி 4.0-க்கு இணங்க புதிய மற்றும் சிறந்த திறமைகளை ஈர்க்கும் சிறப்பான ஒரு மையமாக பினாங்கு பிரகடனப்படுத்தப்படும் என மாநில முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார். அதேவேளையில், அனைத்துலக முதலீடுகளை அதிகரிக்கவும் தூய்மை, பசுமை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு நிறைந்த சூழலில் பினாங்குவாழ் குடும்பங்கள் வாழும் கனவை நனவாக்கவும், கல்வி மற்றும் நிலையான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மாநில துணை முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.
படம் 1:
படம் 2: ஊக்கத்தொகை பெற்றுக்கொண்ட பத்து காவான் இடைநிலைப்பள்ளி முதலாம் படிவ இந்திய மாணவர்கள்