ஜார்ச்டவுன் – பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மாநில அரசு இன, மத மற்றும் கலாச்சாரப் பின்னணியைப் பராமல் தொடர்ந்து ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பிணைப்புகளை வலுப்படுத்துகிறது.
மேலும் கருத்து தெரிவித்த முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், பல ஆண்டுகளாகப் பராமரித்து வரும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும், மாறாக பிளவு ஏற்படுத்தக்கூடாது, என்றார்.
“2008 முதல், வாக்காளர்கள் மற்றும் மக்களிடமிருந்து பெற்ற ஆணையை மாநில அரசு தொடர்ந்து நிலைநிறுத்துகிறது. இந்த நிர்வாகத்தில் சில குறைப்பாடுகள் இருப்பதாக கருதினாலும் மாநில அரசு பொது மக்களின் சமூகநலன் மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
சில சமயங்களில் ஒற்றுமைக்கு பிளவு ஏற்படுத்தும் வகையில் பல பிரச்சனைகள் நடந்தாலும் நாம் அனைவரும் அதனை
நல்லெண்ண உணர்வோடு தீர்க்க முனைய வேண்டும்.
மேலும், முதலமைச்சராக எனது பொறுப்பின் கீழ் அரசு மற்றும் தனியார் துறையின் அனைத்து வளங்களையும், முயற்சிகளையும் ஒருங்கிணைத்து அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி, பொது மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் செயல்படுவதாகும்.
எனவே, மத்திய அரசின் ஆட்சி மாற்றங்களால், இந்த ஆண்டும், கடந்த ஆண்டும், பல உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, கட்ட கட்டமாக செயல்படுத்த இணக்கம் கொண்டுள்ளது, மிகுந்த வரவேற்க கூடிய செயலாகும்.
லெங்கோ பாவா கிராம சமூக மேலாண்மை கவுன்சில் (எம்.பி.கே.கே), ஸ்ரீ டெலிமா சட்டமன்ற மற்றும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற சேவை மையங்கள் இணை ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர், கோனி டான் ஹூய் பெங்; புக்கிட் குளுகோரின் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங்; பினாங்கு மாநகர் கழக மேயர் டத்தோ இராஜேந்திரன் மற்றும் லெங்கோ பாவா எம்.பி.கே.கே உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ், ஒற்றுமை அரசாங்கத்தின் நிர்வாகம் நாட்டின் நல்லிணக்கத்தைப் பேண வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மாநில அளவிலான பொருளாதாரம் வலுவடைய
ஒற்றுமை அரசாங்கத்தை ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக சிறந்த முறையில் வழிநடத்தும் பிரதமரின் முன்முயற்சிகள் மற்றும் சிறப்பாக நிர்வாகம் கையாள்வதைக் காண முடிகிறது.
உள்ளூர் மக்களிடையே சகோதரத்துவத்தை வலுப்படுத்தக்கூடிய தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்நிகழ்ச்சியில், அனைத்து விருந்தினர்களும் பாரம்பரிய மயில் நடனத்தின் மூலம் மகிழ்விக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அதிர்ஷ்ட குலுக்கல் பரிசுகள், பண்டிகைப் பணம் மற்றும் வானவேடிக்கைகள் என பல நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.