மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சுமத்தப்பட்ட 2 குற்றச்சாட்டுகளால் நீதிமன்ற ஜாமினில் வெளியெடுக்கப்பட்டார். இருப்பினும் நம்பிக்கை கூட்டணி அரசு குவான் எங் தொடர்ந்து முதல்வர் பதவியை வகிக்க ஆரதவு வழங்குவதற்கு தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
மேலும், மாநில முதல்வர் மீது சுமத்தப்பட்ட அரசியல் உட்பூசலை பொது மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் “குவான் எங் உடன் ஒற்றுமை பயணம்” எனும் நிகழ்வு மாநில முழுவதிலும் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன. அனைத்து நிகழ்வுகளுக்கு நம்பிக்கை கூட்டணி அரசு தலைவர்கள் நல்ல ஆதரவு வழங்குவது மகிழ்ச்சியை அளிக்கிறது என ஶ்ரீ பினாங்கு அரங்கத்தில் நடைபெற்ற “குவான் எங் உடன் ஒற்றுமை பயணம்” நிகழ்வில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.