பாங் லி கூன் (xxxxxx-xx-xxxx) எண். XXXX எனும் முகவரியில் வசிக்கும் மலேசியராகிய நான் முழுமனதாக நேர்மையுடன் அறிவிக்கிறேன்:
1. மாநில முதல்வரின் குடும்பத்தினரை 2008-ஆம் ஆண்டு முதல் அறிவேன். முதல்வரின் மனைவியான பேட்டி சியூவின் தோழமை மற்றும் பணிவான கதாபாத்திரத்தால் மிக நெருங்கிய தோழனானேன்.
2. 2008-ஆம் ஆண்டு எண்25, பின்ஹோர்ன் சாலை, பினாங்கு எனும் முகவரியில் அமைந்துள்ள வீட்டை ரிம2.5மில்லியனுக்கு வாங்கி சில சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு எனது சகோதரனுக்கு வழங்க எண்ணம் கொண்டேன். எனினும் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கரையான் பிரச்சனை இருப்பதால் அவரது மனைவி வாடகைக்கு வீடுத் தேடுவதாக அறிந்த பிறகு எனது வீட்டைக் கொடுக்க எண்ணம் கொண்டேன். கடந்த 1/7/2009-ஆம் ஆண்டு தொடங்கி மூன்று வருடத்திற்கு வாடகைதாரர் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு மாதத்திற்கு ரிம5,000 வாடகை என நிர்ணயிக்கப்பட்டு கூடுதலாக மூன்று வருடத்திற்கு 30/6/2015-ஆம் ஆண்டு வரை வாடகைக்கு இருந்தனர்.
3. அதேவேளையில் மாநில முதல்வர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் எதிர்நோக்கும் வீட்டுப் பிரச்சனைக் களைய வீடு வாடகைக்கு வழங்கியதற்குப் பெருமிதம் கொள்கிறேன்.
4. எனினும் மாநில முதல்வருக்கு வீட்டை வாடகைக்கு வழங்கியதால் தேசிய முன்னணி மற்றும் அரசு சாரா இயக்கங்கள் உருவாக்கிய கட்டுக்கதைகளால் பெரும் துயரத்திற்கும் மன அழுத்தத்திற்கும் ஆட்க்கொள்ளப்பட்டேன். மேலும் வீட்டின் முன்புறம் பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இறுதிச் சடங்கு ஊர்வலம் நடத்தியதோடு எரிப்பொருள் கொண்ட போத்தல்களை வீட்டின் உள்ளே எரித்து வீட்டின் பாதுகாப்பை சீர்குலைத்தனர்.
5. தொடர்ந்து எனது வீட்டைப் பற்றியும் அதன் நிழற்படமும் அனைத்து நாளிதழ்களிலும் வெளியிடப்பட்டது. இவ்வீடு மிகவும் பிரபலமாகியதால் எதிர்காலத்தில் நான் அல்லது எனது உறவினர்கள் குடியேறினால் பாதுகாப்பில்லை என உணர்ந்து சங்கடம் அடைந்தேன்.
6. எனவே, 2012-ஆம் ஆண்டு தொடக்கத்தில் முதல்வரின் மனையிடம் வாய்மொழியாக இவ்வீட்டை வாங்க தயாராக இருந்தால் ரிம2.8மில்லியனுக்கு விற்க எண்ணம் கொண்டுள்ளதாகக் கூறினேன். பேட்டி சியூ இவ்வீட்டை வாங்க ஆர்வம் கொண்டுள்ளதாகவும் ஆனால் முதல்வர் மீண்டும் அடுத்த தேர்தலில் தோல்வியை நல்கினால் வீட்டை வாங்க இயலாது என்றார். 13-வது பொதுத்தேர்தலுக்குப் பிறகும் ரிம2.8மில்லியன் விலைக்கே இவ்வீட்டை விற்கபடுமா என வினவினார்.
7.13-வது பொதுத்தேர்தலுக்குப் பிறகு மீண்டும் முதல்வரின் மனைவி அந்த வீட்டை வாங்குவதற்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார். 2014-ஆம் ஆண்டு 23/6/2016-ஆம் நாள் முதல்வருடன் நான் ஓர் ஒப்பந்தம் செய்தேன். அந்த ஒப்பந்தத்தில் 5 வருடத்திற்குக்குள் இந்த வீட்டை வாங்கினால் ரிம2.8 மில்லியன் பரிசீலனையில் விற்கப்படும் எனக் குறிப்பிட்டு ரிம100,000 செலுத்தினார் . இதற்கிடையில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வீட்டில் வசிக்க அனுமதித்தேன். .
8. 30/6/2015-ஆம் ஆண்டு மீண்டும் வாடகைக் காலம் நீட்டிப்பு செய்யும் பொழுது இவ்வீட்டை விற்பது சிறந்த செயல் என உணர்ந்தேன். நான் ஒரு தொழிலதிபர், பொறுப்பற்ற பலர் முதல்வரை தாக்க நினைப்பது மட்டுமின்றி எனக்கும் தாமான் மங்கீஸ் நில பிரச்சனைக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை; இதனால் நான் தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாகுவதோடு சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களிலும் என் பெயர் தினந்தோறும் வெளியிடப்படுவது என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை.
9. நான் முதல்வரின் துணைவியார், பெட்டி சியூவிடம் முதல்வருக்கு இவ்வீட்டை வாங்க விருப்பம் உள்ளதா என வினவினேன். அதனை நான் முதல்வருக்கு விற்க முடிவு செய்தபோது சந்தையின் விலையைப் பற்றி நான் ஆய்வு செய்யவில்லை; அது அவசியமற்றதாக கருதினேன். நான் ஏற்கனவே முதல்வர் வாங்குநராக உறுதிச்செய்த வேளையில் விற்பனை விலை தொடர்பாக 23.6.2014-இல் புரிதல் ஒப்புதல் செய்துவிட்டோம்.
10. முதல்வரின் மனைவி பெட்டி வீட்டு கடனுதவிப் பெற்றதால், முன்பதாகவே முடிவுச் செய்த விற்பனை விலை அதாவது ரிம 2.8 மில்லியன் விலையில் விற்பனை ஒப்பந்தம் கையெழுத்திட முடிவுச் செய்தோம். என்னிடம் இருக்கும் பதிவின்படி, விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தம் 28.7.2015-இல் கையெழுத்தானதோடு அக்டோபர், 2015-இல் வங்கியின் முழு கடனுதவி தொகை வெளியிடப்பட்டது.
11. முதல்வரும் அவர் குடும்பத்தினரும் கடந்த 6 ஆண்டுகளாக நல்ல குடியிருப்பாளராக திகழ்ந்தனர். முதல்வர் ஒரு மரியாதையான தலைவர் மற்றும் நான் அவருக்கு என் சொத்து விற்க மிகவும் பெருமையாக கொள்கிறேன். பினாங்கு மாநிலம் அவரது நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது என உணர்கிறேன். நான் மதிக்கும் நபருக்கு என் சொத்து விற்பனை செய்துள்ளேன். இதனை நான் முதல்வரிடம் ரிம2.8 மில்லியனுக்கு விற்பனை செய்ததில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. நான் தேவையற்ற தலைவலி மற்றும் மன அழுத்தத்தை நீக்க விரும்புகிறேன்.
12.நான் மாநில அரசுடன் எந்த வணிகத் தொடர்பும் கொண்டிள்ளாத போது முதல்வர் வீடு விற்பனைக் குறித்து ஒரு பெரிய தேசிய பிரச்சினையாக கூறப்படும் காரணம் புரியவில்லை. நானும் அவரிடம் வீட்டை விற்பதன் மூலம் மாநில அரசுக்கு எந்த நன்மையும் இல்லை. நான் முதல்வரிடம் என்ன விலையில் விற்க வேண்டும் என்பது என் முடிவு. நான் முதல்வரிடம் ரிம2.8 மில்லியனுக்கு வீட்டை விற்க எந்த கட்சியை சார்ந்தோ அல்லது எந்த தகாத செல்வாக்கின் கீழ் அல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
13. நான் வெற்றிகரமாக ஒரு திறந்த குத்தகை முறையில் தாமான் மங்கீஸ் நிலத்தை ஏலம் எடுத்த KLDC நிறுவனத்தின் இயக்குநரோ அல்லது பங்குதாரரோ இல்லை என்று இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் அந்நிறுவனத்தின் மேலாண்மை நிர்வாகத்தில் கூட ஈடுபடவில்லை. இந்த விஷயத்தை சர்ச்சையாக்கி தேவையற்ற இணைப்புகளை உருவாக்கும் எந்த கட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எனக்கு உரிமை உள்ளது.
நான், இந்த அறிவிப்பை நேர்மையுடன் அனைத்தும் உண்மையுடனும் பிரமாணம் சட்டம் 1960 கீழ் உறுதிக் கொள்கிறேன்.