
பினாங்கின் மக்கள் தொகையில் 50% சதவிகீதம், மகளிராக இருந்த போதும், துணிந்து மாற்றங்களுக்கு முடிவெடுக்கும் நிலையில் இன்னும் பிந்தங்கி உள்ளனர். பினாங்கு மாநிலத்தில் அடிமட்டத்தில் வாழும் மகளிர் அரசியல் பொருளாதாரம், சமூகக் கலாச்சாரம் முன்னேற்றத்திற்கும், தலைமைத்துவத்தை வளர்த்துக் கொள்ளவும், ஆண் பெண் பாகுப்பாடு, ஏற்றத்தாழ்வு இல்லாமல் முன்னேர “முன்னோக்கிச் செல்வோம்” (Tampil) திட்டம் அமைகிறது.
பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் இத்திட்டத்தின் மூலம் அடிமட்ட நிலையில் வாழும் மகளிரை அடையாளம் கண்டு அவர்களின் அரசியல், பொருளாதாரம், சமூகக் கலாச்சாரம் முன்னேற்றத்திற்கும், தலைமைத்துவத்தை வளர்த்துக் கொள்ளவும் மற்றும் ஆண் பெண் சமத்துவத்தை உணர்த்தும் நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் மகளிருக்கு மற்றுமின்றி ஆண்களுக்கும் நடத்திவருகிறது.. அதே சமயத்தில் பினாங்கு வாழ் மகளிருக்கு அரசாங்க சலுகைகள் மற்றும் உதவிகள் பெறவும் உதவுகிறது.
பினாங்கு மாநில மகளிரின் வாழ்கைத் தரம் உயரவும், அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறையும் கொண்ட மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் மகளிர் மேம்பாட்டுக் கழகம் சேவை ஆற்றுகிறது. இதுவரை 2 மாவட்ட ரீதியிலும் மற்றும் 3 சட்டசபை அலுவலகம் மூலமும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டன. இந்த 5 இடங்களிலும் ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட மகளிரும் மற்றும் ஆண்களும் கலந்து கொண்டனர்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);