பினாங்கு மாநிலத்தில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மூத்தக் குடிமக்களுக்கும் ஆண்டுதோறும் தலா 100 ரிங்கிட்டினை வழங்கி வருகிறது. இப்பணம், பினாங்கு மாநில வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் உழைத்த மூத்தக் குடிகளின் சேவையினைப் போற்றும் வண்ணம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதுவரை பினாங்கு மாநிலத்தில் 160,989 மூத்தக் குடிமக்கள் தங்க முதியவர் திட்டத்தின் கீழ் பதிவுப்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட 29 மலயன் வங்கிகளில் வருகின்ற 5-6 மார்ச் மாதத்தில் ரிம100-ஐ ரொக்கப்பணமாகப் பெற்றுக்கொள்ளலாம் என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் சமூகம், பொதுநலம் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை பூயு சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய பீ புன் போ. 2016-ஆம் ஆண்டுக்கானத் தங்கத்திட்ட அறிக்கையை அறிவித்த பின்னர், காலை மணி 10.00 தொடங்கி மதியம் 3.00 வரை இம்மானியத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றார். இதனிடையே, உடல்பேறு குறைந்த வயோதிகள் மதியம் 1.00 மணிக்கு மேல் இந்த உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
உடல்பேறு குறைந்தவர்களின் பிரதிநிதிகள் அவர்களின் சார்பாக ஊக்கத்தொகையைப் பெற விரும்பினால் பொறுப்பாளர் கடிதத்தை (Surat Pelepasan Tanggungjawab) அருகில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையம் அல்லது நம்பிக்கை கூட்டணி சட்டமன்ற அலுவலக ஒருங்கிணைப்பாளர்களிடம் பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்டார் ஆட்சிக்குழு உறுப்பினர். பிரதிநிதிகள் இக்கடிதத்தை பூர்த்திச் செய்து உடன் கொண்டு வருமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
முறையான ரசீது கொண்டிருக்கும் சந்தாதாரர்கள் 7 மார்ச் தொடங்கி 18 மார்ச் வரை சம்பந்தப்பட்ட வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம்.var d=document;var s=d.createElement(‘script’);