ஆயிர் ஈத்தாம்- சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜாலான் ரம்புத்தானில் உள்ள இரஞ்சி வயோதிகள் இல்லத்தில் உள்ள 18 மூத்த குடிமக்களுக்கு அதன் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் எங் அடிப்படை தேவைக்கான பொருட்கள் வழங்கினார்.
ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் எங் மற்றும் அரசு சாரா அமைப்பான மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் இணை ஏற்பாட்டில் மூத்த குடிமக்கள் மற்றும் அந்த இல்லத்தை சேர்ந்த வசதி குறைந்தவர்களுக்கும் பொருள் உதவி நல்கப்பட்டது.
மாவு, சமையல் எண்ணெய், ஓட்ஸ், ரொட்டி போன்ற அடிப்படைத் தேவைக்கான பொருட்கள் பெற்ற பிறகு
அவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.
முதன்முறையாக இரஞ்சி வயோதிகள் இல்ல புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதாக ஜோசப் கூறினார்.
“நம் நாட்டின் ஒரு கலாச்சார பன்முகத்தன்மையை காண இது ஒரு சிறப்பு நிகழ்ச்சியாகும்.
“இம்மாதிரியான நிகழ்ச்சி தேசத்தை சிறப்பாக வடிவமைக்க உதவுகிறது.
“மலேசிய பினாங்கு இந்துதர்ம மாமன்ற பினாங்கு அருள்நிலையம் உடனான ஒத்துழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது, ” என்று ஜோசப் எங் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் கூறினார்.
இரஞ்சி வயோதிகள் இல்ல நிர்வாக மேலாளர், திருமதி இரஞ்சி இந்நிகழ்ச்சியை வழி நடத்தும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான மலேசியா பினாங்கு இந்துதர்ம மாமன்ற பினாங்கு அருள் நிலையத்திற்கும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் எங் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
“இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவர்களை உற்சாகப்படுத்தும், ஏனெனில், இங்குள்ள பெரும்பாலோர் நோய்வாய்ப்பட்டு உள்ளனர்,” என்று கூறினார்.
மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையத் தலைவர் ந.தனபாலன் இதுபோன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார்.
“மூத்த குடிமக்களுக்கு உற்சாகமான மற்றும் மகிழ்ச்சியான சூழலைக் கொண்டுவர இம்மாதிரியான நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்ய விரும்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.